- Home
- Cinema
- விக்ரம் கொடுத்த லிப் லாக்... வாந்தி எடுத்து ஷூட்டிங் ஸ்பாட்டையே நாறடித்த வாரிசு நடிகை! ஒரே ரணகளமா போச்சாம்!
விக்ரம் கொடுத்த லிப் லாக்... வாந்தி எடுத்து ஷூட்டிங் ஸ்பாட்டையே நாறடித்த வாரிசு நடிகை! ஒரே ரணகளமா போச்சாம்!
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களின் ஒருவர் விக்ரம். இவருக்கு ஹீரோயினாக நடித்த போது ஏற்பட்ட அனுபவம் குறித்து, நடிகை ஐஸ்வர்யா பகிர்ந்துள்ள தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் விக்ரம் 1990 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் 'என் காதல் கண்மணி' என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர். இந்த படம் இவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெற்று தராவிட்டாலும், விக்ரமின் திறமையான நடிப்பும்... அவரின் அழகும்... அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தது.
அந்த வகையில், 1992 ஆம் ஆண்டு நடிகர் விக்ரம்... பிரபல வாரிசு நடிகை ஐஸ்வர்யாவுடன் இணைந்து நடித்த திரைப்படம் 'மீரா'. பி.சி.ஸ்ரீராம் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் இவர்கள் இருவருக்குமான ரொமான்ஸ் காட்சிகள் சற்று அதிகமாகவே இருக்கும்.
இந்த படம் குறித்தும், இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் தற்போது பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார் நடிகை ஐஸ்வர்யா. இப்படத்தின் அனுபவம் குறித்து ஐஸ்வர்யா கூறுகையில், விக்ரம் ஒரு சிறந்த நடிகர் என்றும், அவருடன் சேர்ந்து நடித்த அனுபவங்கள் தன்னுடைய வாழ்க்கையில் மறக்கவே முடியாது என்றும் கூறியுள்ளார். மேலும் இப்படத்தின் போது லிப்லாக் காட்சிகள் படமாக்கப்பட்டது. எனக்கு விக்ரம் முத்தம் கொடுத்த போது, ரொமான்ஸ் வரவில்லை வாந்தி தான் வந்தது என தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து நெட்டிசன்கள் சிலர், அப்போ ஷூட்டிங் ஸ்பாட்டை நாறடித்து விட்டீர்களா? என கிண்டலாக கமெண்ட் போட்டு வருகின்றனர்.
ஆரம்பத்தில் விக்ரம் அடுத்தடுத்து நடித்த படங்கள் தோல்வி படங்களாகவே அமைந்திருந்தாலும், விடா முயற்சியோடு திரையுலகில் போராடினார் விக்ரம். இதன் பலனாக 1999 ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில், விக்ரம் நடித்த சேது திரைப்படம், மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.
நயன்தாரா - ஜெயம் ரவி நடிக்கும் இறைவன் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
இந்த படத்தின் வெற்றிக்கு பின்னர், விக்ரம் நடித்த காசி, ஜெமினி, சாமுராய், தூள், போன்ற படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. மேலும் தன்னுடைய கதாபாத்திரத்திற்காக உயிரே போகும் அளவுக்கு கூட ரிஸ்க் எடுக்கத் துணிந்தவர் விக்ரம் என்பதை பல படங்களில் நிரூபித்துள்ளார்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகம் மற்றும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். மேலும் சமீபத்தில் இவருக்கு சூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட விபத்தில் விலா எலும்பில் அடிபட்டதை தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு இம்மாதம் 17ஆம் தேதி துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் தன்னுடைய உடல்நலம் குறித்தும் விக்ரம் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாலை ஓரத்தில் உடை மாற்றிய மீனா! மேடையில் ஓப்பனாக பேசிய பிரபல நடிகர்! ஆச்சர்யமூட்டும் தகவல்!