சாலை ஓரத்தில் உடை மாற்றிய மீனா! மேடையில் ஓப்பனாக பேசிய பிரபல நடிகர்! ஆச்சர்யமூட்டும் தகவல்!
நடிகை மீனா சாலை ஓரத்தில் நின்று ஆடை மாற்றிக்கொண்டு நடித்தார் என, நடிப்பு மீது அவருக்கு இருந்த டெடிகேஷன் பற்றி கூறியுள்ளார் பிரபல நடிகர்.
தமிழ் சினிமாவில் 1982 ஆம் ஆண்டு, வெளியான 'நெஞ்சங்கள்' திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை மீனா. இதைத் தொடர்ந்து 'எங்கேயோ கேட்ட குரல்', 'பார்வையின் மறுபக்கம்', 'தீர்ப்புகள் திருத்தப்படலாம்', உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், ஆகிய மொழிகளிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் மீனா.
6 வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா, தன்னுடைய 14 வயதிலேயே கதாநாயகியாக அவதாரம் எடுத்தார். அதன்படி இவர் முதல் முதலில் தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமான நிலையில், இவரின் அழகிற்கும், திறமைக்கும் பல படங்கள் வரிசை கட்டி நின்றது. ' ஒரு புதிய கதை' திரைப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமான மீனாவை, ரசிகர் மத்தியில் பிரபலமடைய செய்தது என்னவோ, 'என் ராசாவின் மனசிலே' திரைப்படம் தான்.
Custody OTT Release Date: வெங்கட் பிரபு இயக்கிய 'கஸ்டடி' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
இதில் சோலையம்மா என்கிற கதாபாத்திரத்தில் மீனா தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்து இருந்தார். இந்த படத்தில் நடிகர் ராஜ்கிரனுக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமீபத்தில் நடிகை மீனா திரையுலகில் காலடி எடுத்து வைத்து 40 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக, பிரபல youtube சேனல் ஒன்று மீனாவுக்கு பாராட்டு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. இதில் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகர் - நடிகைகளாக இருந்த பலர் கலந்து கொண்டனர்.
குறிப்பாக மீனா குழந்தை நட்சித்திரமாக நடித்த போது அவருடன், அன்புடன் ரஜினிகாந்த், எங்கேயோ கேட்ட குரல் ஆகிய படங்களை தொடர்ந்து, மீனாவுக்கு ஜோடியாகவும் நடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு சிறப்பித்தார். ரஜினிகாந்த் - மீனா ஜோடி இணைந்து நடித்த, வீரா, எஜமான், முத்து ஆகிய படங்கள் அனைத்துமே பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில், 'என் ராசாவின் மனசிலே' பட நாயகன் ராஜ்கிரனும் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் 'என் ராசாவின் மனசிலே' படத்தில் மட்டும்தான் மீனா என்னை பார்த்து பயந்ததாக பலரும் நினைப்பார்கள். ஆனால் உண்மையில், அவர் வெகுவாகவே என்னை பார்த்து எப்போதும் பயப்படுவார். படப்பிடிப்பு தொடங்கியது முதல் முடியும் வரை அவர் என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசியது இல்லை. அதைப் போல சிறப்பான நடிப்பை மீனா வெளிப்படுத்தக்கூடிய நடிகை.
அந்த காலத்தில் எல்லாம் கேரவன்கள் கிடையாது. ஆனால் பாடல் காட்சி ஒன்று நடிக்க ஆடை மாற்ற வேண்டிய கட்டாயம் இருந்தது. அப்போது எதையும் பற்றி யோசிக்காமல் மீனா சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரின் மறைவில் நின்று ஆடையை மாற்றிக் கொண்டு வந்தார். அந்த அளவுக்கு நடிப்பின் மீது மிகவும் டெடிகேஷன் உள்ளவர் நடிகை மீனா என புகழ்ந்து தள்ளினார்.