சூர்யாவின் 'கங்குவா' படத்தின் சில காட்சிகளை பார்த்து விட்டு பிரபலம் கூறிய விமர்சனம்! எகிறும் எதிர்பார்ப்பு..!
சூர்யா நடித்து வரும் 'கங்குவா' படத்தின் ஒரு சில காட்சிகளை பார்த்து விட்டதாக பிரபலம் ஒருவர் பேட்டியில் கூறியுள்ளதோடு, படம் குறித்து விமர்சனத்தையும் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில், முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா தொடர்ந்து சமூக அக்கறை கொண்ட திரைப்படங்களையும், தரமான கதைகளையும் அடிப்படையாகக் கொண்ட படங்களையும் தான், அதிகம் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
கடந்த ஆண்டு இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், இவர் நடித்து வெளியான 'சூரரை போற்று' திரைப்படத்திற்காக தேசிய விருதை வென்றார். மேலும் இவர் தயாரிப்பில் வெளியான ஜெய் பீம், கார்கி, ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டுக்களை குவித்தது.
கடற்கரையில் கவர்ச்சி கன்னியாக மாறி கிறங்கடிக்கும் ரகுல் ப்ரீத் சிங்! போட்டோஸ்!
இந்நிலையில் சூர்யா தற்போது பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், வரலாற்று கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட கெட்டப்பில் சூர்யா நடிப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இந்த படத்தின் பிளாஷ்பேக் காட்சிகள் கொடைக்கானல் பகுதியில் படமாக்கப்பட்டதாக கூறப்பட்டது. படப்பிடிப்பில் கலந்து கொள்ள, மனைவி ஜோதிகாவுடன் கொடைக்கானலுக்கு வந்த சூர்யா... ஷூட்டிங் இல்லாத நேரத்தில் கொடைக்கானல் அழகை மனைவியுடன் ரசித்தார்.
சில ரசிகர்களுடன், இருவரும் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படங்களும் வைரலானது. விறுவிறுப்பாக இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில், இப்படத்திற்கு வசனம் எழுதி வரும் பாடல் ஆசிரியர் மதன் கார்த்தி, 'கங்குவா' படத்தின் சில காட்சிகளை பார்த்துவிட்டு தன்னுடைய முதல் விமர்சனம் குறித்து கூறியுள்ளார்.
ரசிகர்களுக்கு ஹாய் சொல்லிக்கொண்டே... ஜாலியாக ஜாக்கிங் போகும் தனுஷ்! வைரலாகும் வீடியோ!
இது குறித்து அவர் தற்போது தெரிவித்துள்ளதாவது, 'கங்குவா' திரைப்படம் சிறுத்தை சிவாவின் ரெகுலர் படம் கிடையாது. இப்படத்திற்காக அதிக உழைப்பை செலுத்தியுள்ளார். மேலும் படம் அருமையாக வந்திருப்பதோடு, ஒவ்வொரு வசனமும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என தெரிவித்துள்ளார். சிறுத்தை சிவா தன்னைத்தானே புதுப்பித்துக் கொண்ட ஒரு திரைப்படமாக 'கங்குவா' இருக்கும் என்றும், இந்த படத்தின் மூலம் சூர்யாவின் நடிப்பில் பல புதிய விஷயங்களை ரசிகர்கள் பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
அதுபோல் சூர்யாவை சிறுத்தை சிவா கையாண்டிருக்கும் விதம் புதுமையாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மதன் கார்த்தி பேட்டியில் கூறியுள்ள இந்த தகவல், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு முடிவதற்கு முன்பாகவே சுமார் 500 கோடி வரை பிசினஸ் ஆகி உள்ளதாக சில பிரபலங்களே உறுதியாக தெரிவித்துள்ள நிலையில், படம் எதைப்பற்றி பேசும் என்றும்? பாகுபலி அளவுக்கு இப்படம் இருக்குமா? என்றும் ரசிகர்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். சூர்யா நடிப்பில் உருவாகி வரும் இந்த பிரம்மாண்ட படத்தை, ஸ்டுடியோ கிரீம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்து வருகிறார். வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு, நிஷாந்த் படத்தொகுப்பு செய்கிறார். இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.