MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 'குக்கூ' படத்தில் நடித்து நிஜத்தில் பார்வையை இழந்த அட்டகத்தி தினேஷ்! பா.ரஞ்சித் கூறிய ஷாக்கிங் தகவல்!

'குக்கூ' படத்தில் நடித்து நிஜத்தில் பார்வையை இழந்த அட்டகத்தி தினேஷ்! பா.ரஞ்சித் கூறிய ஷாக்கிங் தகவல்!

'குக்கூ' திரைப்படத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி வேடத்தில் நடித்ததால், நடிகர் தினேஷுக்கு உண்மையிலேயே பார்வை பறிபோனதாக, பிரபல இயக்குனர் பா ரஞ்சித் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : Jun 05 2023, 05:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

திரையுலகில் அறிமுகமாகும் இளம் நடிகர்கள், நடிப்பின் மீது உள்ள டெடிகேஷனை வெளிப்படுத்தும் விதமாகவும்,  ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காகவும், ரிஸ்க்கான கதாபாத்திரங்களை கூட... மெனக்கட்டு நடிக்கின்றனர். இப்படி தன்னுடைய முதல் படத்திலிருந்து, திறமையான நடிப்பால் ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர் அட்டகத்தி தினேஷ்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

2012 ஆம் ஆண்டு வெளியான 'அட்டகத்தி' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவருடைய நடிப்புக்கு,  ரசிகர்ல்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால், இதைத்தொடர்ந்த அடுத்தடுத்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பினை பெற்றார். மேலும் அட்டகத்தி தினேஷ் ஹீரோவாக நடிப்பதற்கு முன்பே, ஈ, எவனோ ஒருவன், ஆடுகளம், போன்ற படங்களில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அம்பரீஷ் மகன் திருமணத்தில் கலந்து கொண்ட 80-ஸ் பிரபலங்கள்! போட்டோஸ்

35

இவர் நடிப்பில், வெளியான முக்கிய திரைப்படங்களில் ஒன்று 'குக்கூ' இப்படத்திற்காக இவருக்கு தேசிய விருது கூட கிடைக்கலாம் என பலர் கூறிய நிலையில், ஏனோ சில காரணங்களால் அவருக்கு அந்த விருது கிடைக்காமல் போனது. இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ் கண் தெரியாதவர் வேடத்தில் நடித்திருந்தார். மேலும் தன்னுடைய கண்ணை வித்தியாசமான வைத்து நடித்தது இவருக்கே சில பிரச்சனைகளை கொண்டு வந்ததாக கூறி உள்ளார், இயக்குனர் பா ரஞ்சித்.

45

இது குறித்து பேட்டி ஒன்றில் குறுகையில், 'அட்டகத்தி தினேஷ்' குக்கூ  படத்தில் பார்வை இல்லாதவர் போல் நடித்தார்.  படம் முழுக்க அவர் கண்களை ஒரு மாதிரி வைத்துக்கொண்டு நடித்ததால், சில நாட்களில் உண்மையிலேயே அவருக்கு பார்வை போய்விட்டது. கிட்டத்தட்ட அவரது கண்கள் படத்தில் நடித்தது போலவே மாறியது. பின்னர் பல்வேறு சிகிச்சைகள் கொடுத்து மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். என கூறியதோடு, கதாபாத்திரத்திற்காக மிகவும் டெடிகேஷனோடு செயல்படுபவர் தினேஷ் என பாராட்டியும் உள்ளார்.

அப்பா ரஜினியின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்டு! இதை நினைத்து கூட பார்த்ததில்லை என உருகிய ஐஸ்வர்யா!

55
Pa Ranjith

Pa Ranjith

தினேஷ் குறித்து பா ரஞ்சித் கூறியுள்ள தகவல் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மேலும் அட்டகத்தி கணேஷ் நடிப்பில் வெளியான திருடன் போலீஸ், விசாரணை, ஒரு நாள் கூத்து,  இரண்டாம் உலகப்போரில் கடைசி குண்டு, ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அட்டகத்தி தினேஷ் ஜே பேபி, மற்றும் தீரும் போறும், ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Muthukalai Wife Death : சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மனைவி... வலி தாங்க முடியாமல் கதறி அழுத நடிகர் முத்துக்காளை
Recommended image2
This Week OTT Releases : மே 18 முதல் 24 வரை இந்த வாரம் ஓடிடியில் போட்டிபோட்டு ரிலீஸ் ஆகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் இதோ
Recommended image3
Karuppu Box Office Collection : கங்குவா லைஃப்டைம் வசூலை 3 நாளில் வாரிசுருட்டிய கருப்பு... பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த சூர்யா..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved