அப்பா ரஜினியின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்டு! இதை நினைத்து கூட பார்த்ததில்லை என உருகிய ஐஸ்வர்யா!
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய தந்தை சூப்பர் ஸ்டாரின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்டு, மிகவும் உருக்கமாக போட்டுள்ள பதிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நடிகர் தனுஷை உருகி உருகி காதலித்து கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். 16 வருடங்கள், மிகவும் சந்தோஷமாக இந்த தம்பதிகள் வாழ்ந்து வந்த நிலையில், யார் கண் பட்டதோ..? கடந்த ஆண்டு, இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்தனர்.
இதைத் தொடர்ந்து இருவரும் மீண்டும், சேர்ந்து வாழ்வார்கள் என இருவருக்கும் மிகவும் நெருக்கமான சிலர் கூறிய போதிலும், தற்போது வரை இதற்கான எந்த ஒரு அறிகுறிகள் தென்படவில்லை. தனுஷின் புதிய வீடு கிரஹப்ரவேசத்தில் கூட, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரப்பை சேர்ந்த ஒருவர் கூட கலந்து கொள்ளவில்லை. ஐஸ்வர்யா தன்னுடைய மகன்களையும் அனுப்ப மறுத்துவிட்டதாக கூறப்பட்டது.
இவர்களின் விவாகரத்து சமாச்சாரம் ஒருபுறம் பரபரப்பாக போய் கொண்டிருக்க, ஐஸ்வர்ய, தற்போது தான் இயக்கி வரும் 'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அதேபோல் தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடித்து வரும் 'கேப்டன் மில்லர்' மற்றும் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் 'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பு, தற்போது புதுச்சேரியில் நடந்து வருகிறது. இதில் ரஜினிகாந்த் கலந்துகொள்ளும் காட்சிகளும் படமாக்கப்படுகின்றன. மேலும் ரஜினிகாந்தை பார்ப்பதற்கு என்று, பல ரசிகர்கள் ஷூட்டிங் நடக்கும் இடத்தில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தன்னுடைய தந்தையும் சூப்பர் ஸ்டாருமான ரஜினி, காரில் இருப்பது போன்று ஒரு புகைப்படத்தை பகிர்ந்து உங்களை பார்த்து வளர்ந்தேன், ஆனால் உங்களை வைத்து ஒருநாள் படம் இயக்குவேன் என்பதை நினைத்துக் கூட பார்த்ததில்லை. உங்களுடன் சேர்ந்து இந்த உலகத்தை பார்க்கிறேன். நீங்கள் தான் நான் என்பதை இப்போது உணர்கிறேன். ஒவ்வொரு நாளும், உங்களை நான் அதிகமாக நேசிக்கிறேன் 'அப்பா' என்று பதிவிட்டுள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இந்த உருக்கமான பதிவும், அவர் வெளியிட்டுள்ள புகைப்படமும் தலைவரின் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.