52 வயசுலயும் 20 வயசு பொண்ணு போல இருக்கீங்களே.? குஷ்புவின் அழகை பார்த்து அசந்து போன ரசிகர்கள்! வைரல் போட்டோஸ்!
நடிகை குஷ்பு 52 வயதிலும் இளம் ஹீரோயின்களுக்கு சவால் விடும் அழகில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ் திரையுலகில், எத்தனையோ முன்னணி நடிகைகள் இருந்தாலும், ஒரு சில ஹீரோயின்களுக்கு உள்ள கிரேஸ் அவர்கள் வயதானாலும் கூட மாறிவிடுவது இல்லை. அதிலும் ரசிகர்கள் கோவில் கட்டும் அளவுக்கு தனக்கென ஏராளமான ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தவர் குஷ்பு. ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து, 80-பது மற்றும் 90-களில், தென்னிந்திய திரையுலக ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர்.
தமிழ் திரையுலகை தாண்டி ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழியிலும் ஒரு ரவுண்ட் வந்த குஷ்பு, திருமணத்திற்கு பின்பும் பல படங்களில், குணச்சித்திர வேடத்தில் நடித்து வந்தார்.அழுத்தமான கேரக்டரை தேடி தேடி நடித்த போதும், இவருக்கு, ரம்யா கிருஷ்ணனுக்கு கிடைத்தது போல் ஒரு நீலாம்பரி கதாபாத்திரமோ, ராஜ மாதா கதாபாத்திரமோ கிடைக்காமல் போனது துரதிஷ்டம் தான்.
வந்து கொண்டிருக்கிறேன் அதர்மத்தை சர்வ நாசமாக்க! வெளியானது பிரபாஸின் 'ஆதிபுருஷ்' ட்ரைலர்!
வெள்ளித்திரையில் ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காது என தெரிந்ததும், சின்னத்திரையில் ஹீரோயினை மையப்படுத்தி எடுக்கப்பட்ட சில சீரியல்களில் நடித்தார். சின்னத்திரை - வெள்ளித்திரையில் கவனம் செலுத்தி வந்த அதே நேரம், அரசியலிலும் காலடி எடுத்து வைத்த குஷ்பு, திமுக, காங்கிரஸ் காட்சிகளில் சில முக்கிய பொறுப்புகளை வகித்து வந்த நிலையில்... தற்போது அந்த காட்சிகளில் இருந்து விலகி, பாஜக கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார்.
சமீபத்தில் கூட பாஜக கட்சியில் சார்பில் கேன்ஸ் பட விழாவில் கலந்து கொண்டு இந்தியா திரும்பினார். மிகவும் பிசியாக இருந்தாலும், தன்னுடைய பிட்னஸ் மற்றும் அழகில் அதிக கவனம் செலுத்தும் குஷ்பு, 52 வயதிலும் 20 வயது இளம் சிட்டு போல் மாடர்ன் உடை மற்றும் சேலையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது. ரசிகர்கள் பலர் உங்கள் அழகின் ரகசியம் என்ன என்று... ஜெர்க்காகி கேட்டு வருகிறார்கள்.
திறமைக்கு மரியாதை! எவரெஸ்ட் ஏறி சாதனை படைத்த ராஜசேகர் பச்சையை நேரில் சந்தித்து வாழ்த்திய அஜித்!