Custody OTT Release Date: வெங்கட் பிரபு இயக்கிய 'கஸ்டடி' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், கடந்த மாதம் வெளியான 'கஸ்டடி' படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
'மாநாடு' படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய திரைப்படம் கஸ்டடி. தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியான இந்த படத்தில், பிரபல தெலுங்கு நடிகரும், சமந்தாவின் முன்னாள் கணவருமான நாக சைதன்யா கதாநாயகனாக நடித்திருந்தார், அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி செட்டி நடித்திருந்தார். சரத்குமார், அரவிந்தசாமி, பிரேம் ஜி, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
Swara Bhasker: கர்ப்பமாக இருக்கும் தகவலை அறிவித்த தனுஷ் பட நடிகை! குவியும் ரசிகர்கள் வாழ்த்து!
இந்த திரைப்படம் மே 12 ஆம் தேதி, ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான நிலையில், படு தோல்வியை சந்தித்தது. தமிழில் தனக்கு மிகப் பெரிய பிரேக் கொடுக்கும் என நாக சைதன்யா கனவு கண்ட நிலையில், 'கஸ்டடி' திரைப்படம் அவருடைய கனவுக்கே உலை வைத்தது. படம் வெளியான முதல் நாளில் இருந்தே கலவையான விமர்சனங்களை பெற்று வந்த நிலையில், 10 நாட்களை தாண்டியும், மொத்தமாக 10 கோடி கூட வசூல் செய்யவில்லை என கூறப்பட்டது.
நாளுக்கு நாள் வசூல் குறைந்து கொண்டே இருந்ததால், பல திரையரங்குகளில் இருந்து இப்படம் ஒரே வாரத்தில் அதிரடியாக தூக்கப்பட்டது. நாக சைதன்யா இப்படத்தில் நடிக்க சுமார் 10 கோடி சம்பளமாக வாங்கிய நிலையில், அவர் வாங்கிய சம்பளம் கூட இந்த படம் வசூலிக்காதது, தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய பேரிடியாக அமைந்தது.
இந்த படத்தின் டிஜிட்டல் ரைட்ஸை அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றிய நிலையில், இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவலை தற்போது அறிவித்துள்ளது. அதன்படி ஜூன் 9-ஆம் தேதி 'கஸ்டடி' திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓட டி தளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.