30 லிட்டர் தாய் பால் தானம் செய்த விஷ்ணு விஷால் மனைவி; குவியும் பாராட்டு!
நடிகர் விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா ஜோடிக்கு இந்த ஆண்டு பெண் குழந்தை பிறந்த நிலையில்... ஜுவாலா தற்போது சுமார் 30 லிட்டர் தாய்ப்பால் அரசு மருத்துவமனையில் இருக்கும் குழந்தைகளுக்கு தானம் கொடுத்திருக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

விஷ்ணு விஷால் படங்கள்:
தமிழில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில், சிறு பட்ஜெட் படமாக ரிலீஸ் ஆகி, அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்ற 'வெண்ணிலா கபடி குழு' திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானவர் தான் விஷ்ணு விஷால். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜீவா, நீர் பறவை, இன்று நேற்று நாளை, முண்டாசுப்பட்டி, ராட்சசன், என தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களையும், கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார்.
24 மணி நேரம் கெடு விதித்த சிவனாண்டி: கார்த்திக் உண்மையை கண்டுபிடித்தாரா? காத்திகை தீபம் 2!
லால் சலாம் தோல்வி:
நடிப்பை தொடர்ந்து ஒரு தயாரிப்பாளராகவும், வெற்றி படங்களை கொடுத்துள்ள விஷ்ணு விஷால்.. கடைசியாக 'லால் சலாம்' படத்தில் நடித்திருந்தார். கிரிக்கெட் விளையாட்டு மூலம் ஒரு கிராமத்தில் நடக்கும் அரசியலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தை, ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருந்தார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. இப்படத்தின் ஹார்ட் டிஸ்க் மிஸ் ஆன தகவலை வெளியிடாமல் எப்படியோ படத்தை பூசி மொழிகி வெளியிட்ட நிலையில்... அப்படம் அட்டர் பிளாப் ஆனது. லால் ஸலாம் தோல்விக்கு பின்னர் கம்பேக் கொடுக்க காத்திருக்கிறார் விஷ்ணு விஷால்.
சிக்கிய சந்திரகலா.. ஆப்பு வைத்த கார்த்திக் - கார்த்திகை தீபம் 2 பரபரப்பு அப்டேட்!
விஷ்ணு விஷால் படங்கள்:
அவர் நடிப்பில் தற்போது 'இரண்டு வானம்' திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்தை 'ராட்சசன்' பட இயக்குனர் ராம்குமார் இயக்கி உள்ளார். இந்த படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக, மமிதா பைஜு நடிக்கிறார். இதை தவிர விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற, 'கட்டா குஸ்தி' படத்தின் 2ம் பாகத்திலும் நடிக்க தயாராகி உள்ளார். மேலும் 'மோகன் தாஸ்' என்கிற படமும் ரிலீசுக்கு தயாராக உள்ளது.
முதல் மனைவியோடு விவாகரத்து:
நடிகர் விஷ்ணு விஷால், நடிகர் மற்றும் இயக்குனர் நட்ராஜின் மகள் ரஜினியை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு ஆர்யன் என மகன் ஒருவரும் உள்ளார். விஷ்ணு விஷால் - ரஜினி ஜோடி சில கருத்து வேறுபாடு காரணமாக, 2018-ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். முதல் மனைவியை விட்டு பிரிந்த பின்னர்பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா மீது காதல் வயப்பட்ட விஷ்ணு விஷால், கடந்த 2021-ம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் அவரையே திருமணம் செய்து கொண்டார்.
விஷ்ணு விஷால் - ஜுவாலா குழந்தை:
இந்த ஜோடிகளுக்கு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தான் அழகிய பெண் குழந்தை பிறந்தது. தங்களின் திருமண நாளிலேயே பெண் குழந்தை பிறந்ததாக இரட்டிப்பு மகிழ்ச்சியோடு அறிவித்தனர். விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா குழந்தைக்கு நடிகர் அமீர் கான் தான் பெயர் சூட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜுவாலா கட்டாவின் தாய்ப்பால் தானம்:
தற்போது ஜுவாலா கட்டா செய்த செயலுக்கு தான் ரசிகர்கள் மற்றும் தாய்மார்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. அதாவது ஜுவாலா கட்டா தன்னுடைய 5 மாத குழந்தைக்கு கொடுத்த தாய் பால் போக, அதிகமாக சுரக்கும் தாய்ப்பாலை சுமார் 30 லிட்டர் வரை சேமித்து அதனை அரசு மருத்துவமனையில் இருக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு தானமாக கொடுத்துள்ளார்.