- Home
- Cinema
- தொலைக்காட்சி
- 24 மணி நேரம் கெடு விதித்த சிவனாண்டி: கார்த்திக் உண்மையை கண்டுபிடித்தாரா? காத்திகை தீபம் 2!
24 மணி நேரம் கெடு விதித்த சிவனாண்டி: கார்த்திக் உண்மையை கண்டுபிடித்தாரா? காத்திகை தீபம் 2!
Karthigai Deepam 2 Serial 980 Episode Preview : கார்த்திகை தீபம் 2 சீரியலில் சிவனாண்டி தான், தனது அத்தையை ஏமாற்றி வீட்டை எழுதி வாங்கி இருக்கிறார் என்பதை கார்த்திக் கண்டுபிடித்தார இல்லையா என்பது பற்றி பார்க்கலாம்.

கார்த்திகை தீபம் 2 சீரியல் 980ஆவது எபிசோடு அப்டேட்
Karthigai Deepam 2 Serial 980 Episode Preview : கார்த்திகை தீபம் 2 சீரியலில் ஜெயிலில் இருந்து வெளியில் வந்த காளியம்மாள் சிவனாண்டிக்காக சாமுண்டீஸ்வரியின் வீட்டை எழுதி வாங்க திட்டம் போட்டார். இதற்காக அவர் போட்ட திட்டத்தின் படியும் மேஜிக் பேனாவின் மூலமாகவும் சாமுண்டீஸ்வரியிடம் அவரது வீட்டை எழுதி வாங்கிவிட்டார். இதைத் தொடர்ந்து சிவனாண்டி ஊர்க்காரர்கள் மற்றும் போலிஸ் உதவியுடன் சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு சென்று வீட்டை காலி செய்ய வேண்டும் என்றார். இனி என்னுடைய வீடு, நீ எழுதி கொடுத்துவிட்ட என்றார். இதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
சிக்கிய சந்திரகலா.. ஆப்பு வைத்த கார்த்திக் - கார்த்திகை தீபம் 2 பரபரப்பு அப்டேட்!
கார்த்திகை தீபம் 2 புரோமோ வீடியோ
இதைத் தொடர்ந்து கார்த்திக் நீ ஏமாற்றி என்னுடைய அத்தையிடன் கையெழுத்து வாங்கிவிட்ட. அதனை நான் நிரூபிப்பேன் என்று கார்த்திக் ஊறிய நிலையில் அதற்கு 24 மணி நேரம் தான் டைம். அதற்குள்ளாக உண்மையை நிரூபிக்கவில்லை என்றால் வீட்டை காலி செய்ய வேண்டும் என்றார். இதைத் தொடர்ந்து கார்த்திக் உண்மையை கண்டுபிடிக்கும் வேட்டையில் இறங்கினார்.
ஹாஃப் பாட்டில் பீர் குடிச்சிட்டு இளையராஜா செஞ்ச அலப்பறை - புட்டு புட்டு வைத்த ரஜினிகாந்த்!
கார்த்திகை தீபம் 2 சீரியலின் இன்றைய 980ஆவது எபிசோடு
முதலாவதாக கார்த்திக், சந்திரகலா மற்றும் சிவனாண்டி இருவரும் பேசிக் கொள்ளும் வீடியோவை சாமுண்டீஸ்வரியிடம் காண்பித்துவிடுவதாக மிரட்ட, பத்திரப்பதிவு செய்ய வந்தவர்கள் யார் என்று எனக்கு தெரியாது என்றும், அவர்களைப் பற்றி காளியம்மாவிற்கு தான் தெரியவரும் என்றும் சந்திரகலா ஒப்புக் கொண்டார். அதோடு காளியம்மாவிற்கும் போன் போட்டு அதனை நிரூபித்தார். இதைத் தொடர்ந்து கார்த்திக், சாமுண்டீஸ்வரி வைத்திருக்கும் அட்ரஸ் உள்ள இடத்திற்கு சென்று விசாரிக்கிறார்.
கார்த்திகை தீபம் 2 சீரியலின் இன்றைய எபிசோடு
அங்கு அவர்கள் இல்லை. மேலும், பத்திரப்பதிவு செய்யும் இடத்திற்கு சென்று அங்குள்ள சிசிடிவி காட்சிகள் கொண்டு ஆய்வு செய்கிறார். அதில், அவர்கள் யார் என்று தெரிய வருகிறது. இதைத் தொடர்ந்து கார்த்திக் அடுத்தடுத்து விசாரணை மேற்கொண்டு சிவனாண்டி வீட்டை எழுதி வாங்கியதன் பின்னணியை கார்த்திக் கண்டுபிடிக்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது கார்த்திகை தீபம் 2 சீரியலின் இன்றைய எபிசோடு.