Karthigai Deepam 2 Today Episode Promo Video : ஜீ தமிழ் தொலைக்காட்சியில், விறுவிறுப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வரும் 'கார்த்திகை தீபம்' தொடரின் இன்றைய அப்டேட் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

Karthigai Deepam 2 Today Episode Promo Video : கடந்த சனிக்கிழமை எபிசோடில் கார்த்திக்... சிவனாண்டி, சாமுண்டீஸ்வரி வீட்டை எழுதி வாங்கிய விஷயத்தில் உண்மையை கண்டுபிடிக்க களமிறங்கிய காட்சிகளை பார்த்தோம். இதை தொடர்ந்து இன்றைய தினம், கார்த்திக் எந்த ஆசிரமத்திற்காக இல்லத்தை எழுதி கேட்டதாக சொன்னார்களோ அந்த ஆசிரமத்திற்கு நேரில் சென்று விசாரிக்க அவர்கள் நாங்கள் அப்படி யாரையும் அனுப்பவில்லை என்று உண்மையை சொல்கிறார்கள். இதனால் வந்தவர்கள் உண்மையாக ஆசிரமத்தில் இருந்து வந்தவர்கள் இல்லை என்பது தெரிய வருகிறது.

இந்த விஷயத்தை சாமுண்டீஸ்வரியிடம் கார்த்திக் சொல்ல அவள் அதிர்ச்சி அடைகிறாள். அதைத்தொடர்ந்து மறுபக்கம் ரேவதி பரமேஸ்வரி பாட்டியிடம் நடந்த விஷயத்தை சொல்ல, அவர் என் மருமகள் பாவம் என்று வருத்தப்படுகிறார். இதனால் ரேவதி அவங்க உங்கள மதிக்கவே மாட்டாங்க அப்படி இருக்கும்போது நீங்க ஏன் அவங்களுக்காக கவலைப்படுறீங்க என்று கேட்க, பாட்டி என் மருமகள் என்னை தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்கிறாள். என்ன தான் இருந்தாலும் அவ ராஜ ராஜன கட்டிக்கிட்டா. அதனால என் மருமக தான் என்று சொல்கிறார்.

நான் அஜித் பேன் ஆனா ஓட்டு தளபதிக்கு..! அரியலூரில் காலியாகும் பாமக, விசிக ஓட்டு வங்கி!

அதன் பிறகு கார்த்திக் மற்றும் மயில்வாகனம் ஆகியோர் பத்திர பேப்பர்களை வாங்கும் கடைக்கு செல்ல இவர்கள் குறித்து விசாரிக்க பிறகு சிசிடிவி காட்சிகளை வைத்து யார் என்பதை கண்டுபிடிக்கின்றனர். அதன் பிறகு சந்திரகலாவை சந்தித்து விசாரிக்க அவள் எனக்கு எதுவும் தெரியாது என்று மழுப்ப வீடியோ ஆதாரத்தை காட்டி அதிர்ச்சி கொடுக்கின்றனர். பிறகு கார்த்திக் சந்திரகலாவிடம் காளியம்மாவுக்கு போன் போட சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை தொடர்ந்து பாருங்கள்.

ஹாஃப் பாட்டில் பீர் குடிச்சிட்டு இளையராஜா செஞ்ச அலப்பறை - புட்டு புட்டு வைத்த ரஜினிகாந்த்!