Ajith fan Says that he will vote for TVK: விஜய்க்கு தான் என்னுடைய ஓட்டு என்று கூறும் அஜித் ரசிகர் ஒருவரது வீடியோ வைரலாகும் நிலையில் அரியலூரில் பாமக, விசிக ஓட்டு வங்கி அதிகளவில் பாதிக்கப்படக் கூடும்..

தமிழகத்தில் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி தற்போது தளபதி விஜய்யின் ஒவ்வொரு நடவடிக்கையும் அமைந்து வருகிறது. சினிமாவிலிருந்து விலகுவதாக அறிவித்த விஜய் தனது கடைசி படமான ஜன நாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் திரைக்கு வருவதற்கு முன்னதாகவே விஜய்யின் முழு நேர அரசியல் பிரச்சாரம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய விஜய், முதலில் விக்கிரவாண்டியில் தனது முதல் அரசியல் மாநாட்டை நடத்தினார். இதைத் தொடர்ந்து சமீபத்தில் மதுரையில் தளபதி விஜய்யின் 2ஆவது அரசியல் மாநாடு இருந்தது.

ப்ளீஸ்! இனிமே இப்படி பண்ணாதீங்க!'ரோஜா.. ரோஜா..' பாடகர் சத்யன் உருக்கம்! ஏன் என்னாச்சு?

இதைத் தொடர்ந்து தற்போது தமிழகம் முழுவதும் விஜய் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். முதல் கட்டமாக விஜய் திருச்சியில் சுற்றுப்பயணம் மெற்கொண்டார். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் குறிப்பிட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். திருச்சி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தைத் தொடர்ந்து வரும் 20ஆம் தேதி நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும், 27ஆம் தேதி திருவள்ளூர், வட சென்னை ஆகீய மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

Scroll to load tweet…

இறுதியாக வரும் டிசம்பர் 20ஆம் தேதி திண்டுக்கல், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் விஜய் தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்கிறார். இந்த நிலையில் தான் நேற்று முதல் கட்டமாக திருச்சி, அரியலூர்,பெரம்பலூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். விஜய்யின் இந்த சுற்றுப்பயணத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இதில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஜித்தின் தீவிர ரசிகரும் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் தான் அஜித் ரசிகர் தான். ஆனால், விஜய்க்கு தான் என்னுடைய ஓட்டு. எப்போது கட்சி ஆரம்பித்தாரோ அதிலிருந்து தளபதியை பிடிக்க ஆரம்பித்தது. இந்த ஆட்சி ஒன்றும் சரியில்ல. அந்த ஒரு காரணத்திற்காக மட்டும் தான் தளபதிக்கு ஓட்டு போட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். என்னுடைய ஊர் வந்து மனக்குடையான் கிராமம். ஒரு நிலநடுக்கம் வந்தால் என்னுடைய கிராமம் அப்படியே பூமிக்குள் போய்விடும்.

கணவருக்கு போட்டியா? 11 வருடங்களுக்கு பின் தமிழில் ஹீரோயினாக ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா!

இதுவரை எத்தனயோ கட்சி வந்தும் ஒன்றும் மாறவில்லை. விஜய் வந்தால் எங்களுடைய கிராமத்தில் மாற்றம் வரும் என்று நம்புகிறேன். என்னுடைய குடும்பத்தில் மொத்தம் 8 ஓட்டு, அதுமட்டுமின்றி என்னுடைய ஏகே சார்பில் மொத்தம் 42 ஓட்டு இருக்கு. அது எல்லாமே என்னுடைய தளபதிக்கு தான். விஜய் கட்சி ஆரம்பித்து ஒன்றரை வருடங்கள் தான் ஆகிறது. அப்படியிருக்கும் போது எதன் அடிப்படையில் மாற்றம் வரும் என்று நீங்கள் எதிர்பார்க்குறீகள் என்று நிரூபர் கேட்க, அதற்கு நம்பிக்கை தான் வாழ்க்கை. நம்பிக்கை.

ஆனால், இதற்கு முன்னதாக கிட்டத்தட்ட ஒரு 50 ஆண்டுகால அரசியலில் திமுக, அதிமுக தான் தமிழகத்தில் மாறி மாறி ஆட்சி செய்தார்கள். இந்த 50 ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு முழு திருப்தியா இந்த ஆட்சி நல்லா இருக்கு என்று எந்த கட்சியும் ஆட்சி செய்யவில்லை. தளபதி விஜய் ரசிகர்கள், தொண்டர்களையும் பொதுவான மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் ஒரு மாற்றம் வர வேண்டும் என்பது தான். திமுக, அதிமுகவை தாண்டி 3ஆவது ஒரு கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை தான் அவர்கள் ஆசைப்படுகிறார்கள். இந்த 2 பெரிய கட்சிகளுக்கு மாற்று ஒரு கட்சி உருவாக முடியுமா? அப்படி வந்து அவர்களால் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய முடியுமா? என்ற எதிர்பார்ப்பும், நம்பிக்கையும், ஆவலும் மக்களுக்கு வந்துவிட்டது. விஜய்க்கு தளபதி தொண்டர்கள் தாண்டி தொண்டர்களும் வாக்களிப்பார்கள் என்று அந்த இளைஞர் பேசியிருக்கிறார். அவர் மட்டுமின்றி அவரைப் போன்று கோடிக்கணக்கான இளைஞர்களும் விஜய் தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இளைஞர்கள் பேசி வரும் நிலையில் அரியலூரில் பாமக மற்றும் விசிக ஓட்டு விகிதம் அதிகளவில் பாதிக்கப்படக் கூடும் என்று தெரிகிறது. அரியலூர் மாவட்டத்தில் மட்டும் கடந்த 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி கிட்டத்தட 2,60,000க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருக்கிறார்கள். இந்த சூழலில் திமுக மற்றும் பாஜகவிற்கு எதிராக விஜய் களமிறங்கும் நிலையில் மாற்றத்தை விரும்பக் கூடிய இன்றைய இளம் தலைமுறையினரிடையே விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்தி 2026 சட்டமன்ற தேர்தலில் மாற்றத்தை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.