Vijay: கார் விஷயத்தில் விதிகளை மீறிய விஜய்! அபராதம் விதிக்கப்பட்டதால் பரபரப்பு..!
நடிகர் விஜய்க்கு தற்போது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, சென்னை பனையூரில் உள்ள தன்னுடைய அலுவலகத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினரையும், ரசிகர்களையும் சந்தித்தார். இதில் அவர் கலந்து கொள்ள வந்த காரில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கரின் விளைவாக தற்போது அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் தற்போது பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களாக ஹைதராபாத்தில் நடந்த நிலையில், தற்போது சென்னை பூந்தமல்லி அருகே உள்ள தனியார் ஸ்டுடியோ ஒன்றில் பிரம்மாண்டமாக செட் அமைத்து எடுக்கப்பட்டு வருகிறது. இதில் நடிகர் விஜய், ராஷ்மிகா, சரத்குமார், பிரகாஷ்ராஜ் மற்றும் முக்கிய நடிகர்கள் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
முக்கிய இடங்களில் வாரிசு படத்தின் வெளியீடு உரிமையை கைப்பற்றிய உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ்!
நேரம் கிடைக்கும் போதெல்லாம்... தன்னுடைய ரசிகர்களையும், விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களையும் சந்திப்பதை வழக்கமாக வைத்துள்ள விஜய்... கடந்த 20 தேதி அன்று வழக்கம் போல் சென்னை பனையூரில் உள்ள தன்னுடைய அலுவலகத்தில் ரசிகர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தினரை சந்தித்து பேசியது மட்டும் இன்றி புகைப்படமும் எடுத்து கொண்டார்.
இதில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கவுன்சிலர்களும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரசிகர்களுக்கு விஜய் சில ஆலோசனைகளை அழகியதாக கூறப்படுகிறது. குறிப்பாக மக்கள் தன்னுடைய படங்கள் வெளியாகும் போது, அதிகம் செலவு செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும், முதலில் குடும்பத்தை நல்லபடியாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அதே போல் பண உதவி செய்யமுடியாவிட்டாலும், உங்களால் முடிந்தவரை சமூக சேவைகள் மற்றும் ஏழை மக்களுக்கு உதவுங்கள் என ரசிகர்களுக்கு அன்பு கட்டளை போட்டதுடன், நிகழ்ச்சியின் இறுதியில் ரசிகர்களுடன் புகைப்படங்களையும் எடுத்து கொண்டுள்ளார்.
நிகழ்ச்சி சுமூகமாக முடிந்த நிலையில், தற்போது விஜய் வந்த கார் தான் அவருக்கு பிரச்சனையாக மாறியுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு நடிகர் விஜய் தன்னுடைய காஸ்ட்லி காரில் வந்த போது, இதில் தடை செய்யப்பட்ட கருப்பு நிற சன் ஸ்டிக்கர் ஒட்டி இருந்ததால், மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விஜய்க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.