'வாரிசு'-க்கு நோ பிராபலம்..! தெலுங்கு ரிலீஸ் குறித்து பாசிட்டிவ் பதில் கொடுத்த தயாரிப்பாளர் சங்கம்..!

நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரி'சு திரைப்படம் தெலுங்கில் வெளியாவதில் சிக்கல் இருக்கும் என கூறப்பட்ட நிலையில், எவ்வித பிரச்சனையும் இருக்காது என தற்போது தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
 

There is no problem with the release of actor Vijay Varisu film in Telugu

இயக்குனர் வம்சி இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் 'வாரிசு'. இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னை பூந்தமல்லி அருகே உள்ள பிரபல தனியார் ஸ்டுடியோவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த படம் குறித்து அவ்வபோது சில தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், 'வாரிசு' திரைப்படம் தெலுங்கில் வெளியாவதில் சில சிக்கல்கள் இருக்கலாம் என கூறப்பட்டது.

இதற்கு முக்கிய காரணம், பண்டிகை நாட்களில் நேரடி வெளியாகும் தெலுங்கு திரைப்படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படும் என சமீபத்தில், தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த நிலையில், இதன் காரணமாக மற்ற மொழிகளில் 'வாரிசு' திரைப்படம் வெளியானாலும் தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் வெளியாவதில் சிக்கல் ஏற்படக்கூடும் என பரபரப்பு தகவல் பரவியது.

'வாரிசு' பட படப்பிடிப்பில் கைகலப்பு! வெறித்தனமாக தாக்கப்பட்ட செய்தியாளர்கள்? என்ன காரணம்..! வெளியான உண்மை!

There is no problem with the release of actor Vijay Varisu film in Telugu

இப்படி வெளியான தகவலுக்கு, தமிழ் திரையுலகை சேர்ந்த இயக்குனர்கள் நடிகர்கள் தயாரிப்பாளர்கள் என பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வந்தனர். அதேபோல் இது குறித்து தயாரிப்பாளர்கள் செயற்குழு கூட்டத்திலும் விவாதிக்கப்படும் என கூறப்பட்டது. மேலும் 'வாரிசு' படத்தின் தெலுங்கு ரிலீஸ் குறித்து திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான தேனாண்டாள்  முரளி தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் நிவாரகிகளுடன் பேசியதாகவும்,  இதை தொடர்ந்து, தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்களுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

ரத்தன் டாட்டா வாழ்க்கை வரலாறு படத்தை இயக்கும் சுதா கொங்கரா? ஹீரோ இவர்கள் இருவரின் ஒருவர் தான்! கசிந்தது தகவல்.

There is no problem with the release of actor Vijay Varisu film in Telugu

 இதற்கு அவர்கள் தங்களுடைய மாநிலத்தில் 'வாரிசு' திரைப்படம் வெளியாவதில் எந்த சிக்கலும் இல்லை என உறுதி அளித்துள்ளதாகவும், இதனால் விஜய்யின் 'வாரிசு' திரைப்படம் தெலுங்கில் வெளியாவதில் எவ்வித பிரச்சனையும் இருக்காது என கூறப்படுகிறது. இந்த தகவல் தெலுங்கு திரையுலகை சேர்ந்த விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Shivani: கண்ணாடி முன் நின்று... கருப்பு நிற பனியனோடு... கவர்ச்சி தரிசனம் கொடுத்த ஷிவானி! அதகள போட்டோஸ்..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios