குழந்தையாக தொட்டிலில் தவழும் தளபதி விஜய்..! அதிகம் பார்த்திடாத அரிய புகைப்படங்கள் இதோ..!
தளபதி விஜயின் குழந்தை பருவ அரிய புகைப்படங்கள் சில தற்போது சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
கோலிவுட் திரையுலகில் தளபதி விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழ் திரையுலகை தாண்டி, மலையாளம், தெலுங்கு போன்ற பிற மொழிகளிலும் இவருக்கான ரசிகர்கள் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் வருகிறது.
எனவே தளபதி விஜய் குறித்து எந்த ஒரு புகைப்படம், மற்றும் அவருடைய திரைப்படங்கள் குறித்த தகவல்கள் வெளியானால் அது, ரசிகர்கள் மத்தியில் வேறு லெவலுக்கு சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் ஆகி விடுகிறது. அப்படி தான் தற்போது விஜய் தொட்டிலில் தவழும் குழந்தை பருவ புகைப்படங்கள் சில, சமூக வலைதளத்தில் விஜய் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள்: முதல் முறையாக குழந்தையின் கியூட் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை பிரணீதா! அம்மாவை போல் கொள்ளை அழகு!
தன்னுடைய அம்மா - அப்பாவுடன், கியூட் குழந்தையாக இருக்கும் விஜயின் இந்த புகைப்படத்தை பலரும் பார்த்திருக்க வாய்ப்பிலை எனலாம். எனவே வழக்கம் போல் இந்த புகைப்படத்தையும் தளபதி ரசிகர்கள், வைரலாகி வருகிறார்கள்.
தற்போது விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில், உருவாகி வரும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே, ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் படமாக்கப்பட்ட நிலையில், மூன்றாம் கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு விசாகப்பட்டினம் சென்றுள்ளனர். நேற்று விஜய் விமான நிலையத்தில் இருந்து விசாகப்பட்டினம் சென்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலானது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: பிகினி எல்லை தாண்டிய கவர்ச்சி... மாலத்தீவில் மஜாவாக போஸ் கொடுத்து இளம் நெஞ்சங்களை ஏங்க விடும் வேதிகா!