சூப்பர் ஹிட் சீரியலில் இருந்து திடீர் என விலகும் கதாநாயகன்! யாரும் எதிர்பாராத காரணம்?
பிரபல சீரியலில் இருந்து, அந்த தொடரில் நடித்து வந்த கதாநாயகன் விலகியதாக அறிவித்ததை தொடர்ந்து ரசிகர்கள் அவரை மிகவும் மிஸ் செய்வதாக உருக்கமாக தெரிவித்து வருகிறார்கள்.
Actor Surjith Kumar Quit Sandhya Raagam
ஜீ தமிழ் தொலைக்காட்சியில், கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கப்பட்ட சீரியல் 'சந்தியா ராகம்'. ரொமான்டிக் மற்றும் குடும்ப கதைய மையமாக வைத்து தொடங்கப்பட்ட இந்த தொடர் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலை பிரதாப் மணி என்பவர் இயக்கி வரும் நிலையில், சந்தியா ஜகர்லாமுடி, அந்தாரா சுவர்ணாக்கர், புவனா லஸியா, தனலட்சுமி, ராஜு பரமேஸ்வர, சுர்ஜித் குமார், உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
Zee Tamil Sandhya Raagam Serial
சுமார் 300 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் இந்த சீரியலில் நடித்து வந்த கதாநாயகன் சுர்ஜித் குமார் அதிரடியாக இந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இவர் சீனு என்கிற கதாபாத்திரத்தில் 'சந்தியா ராகம்' தொடரில் நடித்து வந்தார்.
மாலை அணிந்து சபரிமலைக்கு சென்ற சசிகுமார்; வைரலாகும் போட்டோஸ்!
Surjith Emotional Instagram Post
மேலும் இது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுர்ஜித் போட்டுள்ள பதிவில், கடவுள் எல்லாவற்றையும் ஒரு காரணத்திற்காகவே செய்கிறார். "என் சந்தியா ராகம் குடும்பத்தை விட்டு விலக உள்ளேன். என்னுடைய நிஜ குடும்பத்திற்காக எடுக்கப்பட்ட முடிவு இது. இயக்குனர், தயாரிப்பாளர், ஜீ தமிழ்,,என்னுடன் பயணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், மற்றும் அனைத்து ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். என்னை நம்பி என்னை இந்த கதாபாத்திரமாகவே உணர வைத்து, நடிக்க அனுமதித்த அனைத்து ரசிகர்களுக்கும் மீண்டும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். நான் உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். உங்களிடம் இருந்தும் இதே மாதிரியான அன்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார்.
Zee Tamil Sandhya Raagam Serial
சுர்ஜித்தின் இந்த முடிவு அவருடைய ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மேலும் இந்த சீரியலை விட்டு சுஜித் விலகுவது நம்ப முடியவில்லை என்றும், ஏன் இந்த தொடரில் இருந்து விலகுகிறீர்கள் உங்கள் கதாபாத்திரத்தில் மற்ற யாரையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை என உடைந்த இதயங்களை பறக்கவிட்டு தங்களுடைய அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர் ரசிகர்கள்.
74 வயதிலும் ஃபிட்டாக இருக்கும் ரஜினிகாந்த்; அவர் தவிர்க்கும் இந்த உணவுகள் தான் காரணமாம்!
Surjith Kumar Quit Serial
இவருக்கு சமூக வலைதள மூலம் வரும் பதிவுகள் மூலம், எந்த அளவுக்கு ரசிகர்கள் 'சந்தியா ராகம்' சீனுவாகவே இவரை ஏற்றுக்கொண்டனர் என்பதையும் பார்க்க முடிகிறது.
Sandhya Raagam Serial Actor Surjith Kumar
அதேபோல் இன்னும் சில ரசிகர்கள், உங்களுடைய தனிப்பட்ட கருத்துக்கு மரியாதை கொடுப்பதாகவும், கூடிய விரைவில் புது சீரியலில் உங்களை சந்திக்க ஆர்வமாக இருக்கிறோம் என தெரிவித்து வருகின்றனர்.
காமெடியால் உயர்ந்து; குடியால் மாண்ட நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது!
Fans Sad Reaction
பல பிரபலங்கள் பழைய சீரியலில் இருந்து விலகிபுது சீரியலில் நடிப்பது வழக்கம். ஆனால் சீனு தன்னுடைய குடும்பத்திற்காக இந்த சீரியலில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார் இது யாரும் சற்றும் எதிர்பாராத காரணம்
என்பது குறிப்பிடத்தக்கது.