மாலை அணிந்து சபரிமலைக்கு சென்ற சசிகுமார்; வைரலாகும் போட்டோஸ்!
இயக்குனர், தயாரிப்பாளர், மற்றும் நடிகர் சசிகுமார், சபரிமலைக்கு மாலை அணிந்து சென்றுள்ள நிலையில் இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
Sasikumar Cinema Carrier
மதுரையைச் சேர்ந்த நடிகர் சசிகுமார், ஒரு நடிகராகவும் துணை இயக்குனராகவும் தன்னுடைய கெரியரை துவங்கியவர். 1999 ஆம் ஆண்டு, இயக்குனர் பாலா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான 'சேது' திரைப்படத்தில் விக்ரமின் நண்பராக நடித்திருந்தார். இந்த படத்தில் சசிகுமார் துணை இயக்குனராகவும் பணியாற்றி வந்தார். இதை தொடர்ந்து 2008-ஆம் ஆண்டு வெளியான 'சுப்பிரமணியபுரம்' திரைப்படத்தை இயக்கி தயாரித்து, அதில் பரமன் என்கிற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.
Sasikumar Sabarimala Visit Photos
இந்த திரைப்படத்தின் வெற்றி இயக்குனர் சசிகுமாருக்கு தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பெற்று தந்தது. ஒரு தயாரிப்பாளராக சசிகுமார் வெற்றி பெற்றார். மேலும் சுப்ரமணியபுரம் திரைப்படம் சிறந்த படத்திற்கான ஃபிலிம் ஃபேர்விருது சிறந்த இயக்குனருக்கான விருது, உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றது.
74 வயதிலும் ஃபிட்டாக இருக்கும் ரஜினிகாந்த்; அவர் தவிர்க்கும் இந்த உணவுகள் தான் காரணமாம்!
Actor Cum Producer Sasikumar
இதைத்தொடர்ந்து நடிகராகவும் இவருக்கு நடிக்க பல வாய்ப்புகள் கிடைத்ததால், திரைப்பட இயக்குனர் - தயாரிப்பாளர் என்பதை தாண்டி வெற்றிகரமான நடிகராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் இவர் நடித்த நாடோடிகள், சம்போசிவ சம்போ, போராளி, மாஸ்டர்ஸ், சுந்தரபாண்டியன், குட்டி புலி, தலைமுறைகள், பிரம்மன், தாரதப்பட்டை, வெற்றிவேல், அப்பா, கிடாரி, போன்ற படங்கள் நல்ல வரவைப்பை பெற்றன.
Sasikumar Visit Sabarimala
தற்போது இவரின் கைவசம் நந்தன், டூரிஸ்ட் ஃபேமிலி, எவிடன்ஸ், நானா, பகைவனுக்கு அருள்வாய், போன்ற படங்கள் உள்ளது. இன்னும் ஏகப்பட்ட படங்களில் நடிக்க தயாராகி வருகிறார். விஜய் சேதுபதி போல் ஹீரோவாக மட்டுமின்றி, குணசித்ர வேடங்களிலும் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் சசிகுமார். சமீப காலமாக ஹீரோ சப்ஜெக்ட் படங்களை விட, பெர்ஃபார்ம் செய்யக்கூடிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் சபரிமலைக்கு சென்றுள்ள நிலையில் அங்கு எடுத்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
காமெடியால் உயர்ந்து; குடியால் மாண்ட நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது!