காமெடியால் உயர்ந்து; குடியால் மாண்ட நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது!
மறைந்த நடிகர் ஜே பி சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக இயக்க உள்ளதாக குளோபல் ஒன் ஸ்டுடியோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஜே பி சந்திரபாபு:
தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த சில நடிகர்கள், விதியின் சூழ்ச்சியால் வீழ்ச்சியை அடைந்து... மாண்டதுண்டு. அப்படி விதியின் வசத்தால் வஞ்சிக்கப்பட்டு, உயிரிழந்த நடிகர் தான் ஜே பி சந்திரபாபு.
நகைச்சுவை நடிகராக திரைப்படங்களில் அறிமுகமாகி, பின்னர் இயக்குனர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர், ஹீரோ, என திரை உலகின் உச்சத்தை அடைந்தவர். 1950-களிலேயே லட்சத்தில் சம்பளம் வாங்கிய இவரின் திரை உலக வாழ்க்கை, மற்றும் அதற்கு அப்பாற்பட்ட சொந்த வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க, குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் நிறுவனம் முடிவு செய்து அதற்கான உரிமையை பெற்றுள்ளதாக தற்போது அறிவித்துள்ளது.
ஜே பி சந்திரபாபு யார்?
தூத்துக்குடியில் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர் தான் ஜே பி சந்திரபாபு. இவருடைய உண்மையான பெயர் ஜோசப்பிச்சை. இவரை வீட்டில் உள்ள அனைவரும் பாபு என்றே அழைத்து வந்த நிலையில், இவர் ஒரு சந்திரகுல வம்சத்தை சேர்ந்தவர் என்பதால், தன்னுடைய பெயரை சந்திர பாபு என மாற்றிக்கொண்டார்.
விடுதலைப் போராட்ட வீரரான இவருடைய தந்தை, 'சுதந்திர வீரன்' என்கிற பத்திரிகையை ஒன்றை நடத்தி வந்தார். இதை எதிர்த்த பிரித்தானிய அரசு, சந்திரபாபு குடும்பத்தின் மொத்த சொத்தையும் பறிமுதல் செய்து அவர்களை குடும்பத்தோடு இலங்கைக்கு நாடு கடத்தியது. எனவே சந்திரபாபு வளர்ந்தது, படித்தது எல்லாம் கொழும்பில் உள்ள ஒரு கல்லூரியில் தான். பின்னர் சந்திரபாபுவின் குடும்பம் 1943 ஆம் ஆண்டு சென்னைக்கு குடி பெயர்ந்தனர். சந்திரபாபு பிரபல பத்திரிக்கையில் பணியாற்றி வந்தார். சிறு வயதில் இருந்தேன் நன்கு பாடுவதிலும், நடிப்பதிலும் ஆர்வமாக இருந்த இவர், தன்னுடைய திறமையை நிரூபிக்க திரைப்பட வாய்ப்புகளை தேட துவங்கினார்.
'குட் பேட் அக்லீ' படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படம் - ஹீரோ பற்றி வெளியான தகவல்!
நடிப்புக்காக தற்கொலை வரை சென்ற சந்திரபாபு:
பலமுறை பட வாய்ப்புகள் மறுக்கப்பட்டதால், ஒரு நிலையில் தற்கொலைக்கு முயன்று நீதிபதியிடமே வாதாடி என்னுடைய உணர்வுகளை மன வேதனையை வெளிப்படுத்தினார். இதன் பின்னர் 1947 ஆம் ஆண்டு 'அமராவதி' எனும் திரைப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமான சந்திரபாபு, பின்னர் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், போன்ற முன்னணி நடிகர்கள் உடன் நடிக்கும் அளவுக்கு உயர்ந்தார். எம்ஜிஆருக்கு மிகவும் நெருங்கிய நண்பராக இருந்த சந்திரபாபு, எம்ஜிஆரை வைத்து ஒரு படத்தை தயாரிக்க முடிவு செய்து நிலையில், எம்.ஜி.ஆர் அந்த படத்தில் இருந்து விலகியதும் இவரின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என தற்போது வரை கூறப்படும் கருத்துக்களில் ஒன்றாக உள்ளது.
நல்ல மனம் படைத்த நடிகர்:
சந்திரபாபு தன்னால் முடிந்தவரை, பிறருக்கு கொடுத்து அதில் சந்தோசம் காண்பவர் சந்திரபாபு. இதன் காரணமாகவே இவரை கடைசி வரை தேங்காய் சீனிவாசன், எம் எஸ் விஸ்வநாதன் போன்ற பிரபலங்கள் அரவணைத்தனர்.
சோபிதாவை திருமணம் செய்யும் முன் நாக சைதன்யா போட்ட முக்கிய கண்டீஷன்! என்ன தெரியுமா?
ஆசையாக திருமணம் செய்து கொண்ட மனைவியும் தன்னை விட்டு ஒரே நாளில் பிரிந்து போன துயரம் தாங்க முடியாமல், வேதனையின் உச்சத்திற்கு சென்ற சந்திரபாபு, திரைப்பட தோல்விகளாலும் துவண்டு குடிக்கு அடிமையானார். பின்னர் மஞ்சள் காமாலை காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரை பற்றிய இதுபோன்ற கதைகள் பலருக்கும் தெரிந்திருந்தாலும், இவரைப் பற்றி தெரியாத இன்னும் சுவாரஸ்யமான விஷயங்கள் இப்படத்தில் இடம்பெற போவதாக கூறப்படுகிறது.
ஜே பி சந்திரபாபு வாழ்க்கை வரலாறு:
இந்த படத்தை எடுக்க, ஜே பி சந்திரபாபுவின் சகோதரர் ஜகவரிடம் இருந்து உரிமையை பெற்றுள்ளதாக குளோபல் ஒன் ஸ்டுடியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல் எழுத்தாளரும் இயக்குனருமான கே. ராஜேஸ்வர் எழுதிய 'ஜே பி தி லெஜெண்ட் ஆப் சந்திரபாபு' என்கிற நாவலின் உரிமையையும் தயாரிப்பு நிறுவனம் பெற்றுள்ளது.
இந்த படத்திற்கு ஜகன்மோகன் திரைக்கதை மற்றும் வசனம் எழுத, எழுத்தாளரும் பாடல் ஆசிரியருமான மதன் காக்கி கூடுதல் திரைக்கதை மற்றும் வசனங்கள் எழுத உள்ளார். மிகப் பிரமாண்டமாக உருவாக உள்ள இந்த திரைப்படத்தின் இயக்குனர், நடிகர்கள், குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
அமரன் பட வெற்றி; SK 25 படத்திற்கு தாறுமாறாக சம்பளத்தை உயர்த்திய சிவகார்த்திகேயன்!
குளோபல் ஒன் நிறுவனம் இதற்கு முன்பு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ஹே சினாமிகா, ராமன் தேடிய சீதை, உள்ளிட்ட சில திரைப்படங்களை தயாரித்துள்ளது. கடைசியாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான 'கோலி சோடா தி ரைசிங்' என்கிற வெப் தொடரை தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.