சோபிதாவை திருமணம் செய்யும் முன் நாக சைதன்யா போட்ட முக்கிய கண்டீஷன்! என்ன தெரியுமா?
சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை அண்மையில் திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர் சோபிதாவுக்கு போட்ட நிபந்தனை பற்றி தெரியவந்துள்ளது.
சமந்தாவுடன் விவாகரத்து:
நடிகை சமந்தாவை சுமார் 7 ஆண்டுகளுக்கு மேல் காதலித்து திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யா, 2021-ஆம் ஆண்டு, விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தார். சமந்தாவும் - நாக சைதன்யாவும் ஒரே நேரத்தில் இந்த தகவலை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். தென்னிந்திய திரையுலகில் அதிகம் ரசிக்கப்பட்ட இந்த கியூட் ஜோடி, இப்படி ஒரு முடிவை எடுத்ததை ரசிகர்களால் முதலில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும், பின்னர் எதார்த்தத்தை புரிந்து கொண்டு கடந்து சென்றனர்.
சோபிதா மேல் காதலில் விழுந்த நாக சைதன்யா:
ஒருதரப்பினர் சமந்தா மீது தான் தவறு என வாயிக்கு வந்த வதந்திகளை பரப்பிய நிலையில், மற்றொரு தரப்பினர் நாக சைதன்யா தான் விவாகரத்துக்கு காரணம் என கூறினர். தற்போது வரை சமந்தாவின் இரண்டாவது திருமணம் குறித்த எந்த ஒரு தகவலும் வெளியாகாத நிலையில், சமந்தாவை பிரிந்த ஒரே வருடத்தில், நாக சைதன்யா பிரபல பாலிவுட் நடிகை சோபிதாவை காதலிப்பதாக தகவல்கள் பரவ தொடங்கியது. இருவரும் வெளிநாடுகளில் ஒன்றாக எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் கசிந்து இவர்கள் டேட்டிங் செய்வதை உறுதி செய்தது.
அமரன் பட வெற்றி; SK 25 படத்திற்கு தாறுமாறாக சம்பளத்தை உயர்த்திய சிவகார்த்திகேயன்!
இருவருமே தெடர்ந்து தங்களின் காதல் விவகாரம் குறித்து வாய் திறக்காமல் இருந்த நிலையில், சமந்தாவின் நண்பர் ப்ரீத்தம் ஜுகல்க்கர் சமந்தா - சைதன்யா பிரிவுக்கு சோபிதா தான் காரணம் என மறைமுகமாக குற்றம் சாட்டினார். சமந்தா - சைதன்யா விவாகரத்தின் போது, ஜுகல்க்கருடன் சமந்தா எடுத்து கொண்ட புகைப்படம் வெளியான போது, சமந்தா தன்னுடைய சகோதரி போன்றவர் என்றும், எங்கள் இருவருக்கும் இடையே உள்ள உன்னதமான உறவு பற்றி சைதன்யா அறிவார் என பதிலடியும் கொடுத்திருந்தார்.
சோபிதா - நாக சைதன்யா திருமணம்:
ஒருவழியாக நாக சைதன்யா - சோபிதா ஜோடி ஆகஸ்ட் 4-ஆம் தேதி, மிகவும் எளிமையான முறையில் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். ஹைதராபாத்தில் உள்ள நாகார்ஜுனாவின் வீட்டில் தான் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் மிகவும் நெருக்கமான குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து டிசம்பர் 8-ஆம் தேதி சோபிதா - நாக சைதன்யா திருமணம் நடந்தது. தங்களின் திருமணத்தை மிகவும் பிரைவேட்டாக நடத்த விரும்பிய இருவரும் 200 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுத்ததாக செய்திகள் வெளியானது.
குறிப்பாக இவர்களின் திருமணத்தில், தெலுங்கு திரையுலக பிரபலங்களான, சிரஞ்சீவி குடும்பம், ராணா, வெங்கடேஷ் டகுபதி, அல்லு அர்ஜுன், ஆகியோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இவர்களை தவிர, கோலிவுட் திரையுலகை சேர்ந்த, நடிகர் கார்த்தி, மணிரத்னம், போன்ற சிலர் மட்டுமே கலந்து கொண்டு புதுமண ஜோடிகளை வாழ்த்தி உள்ளனர்.
ஷாலினியை போல்; திருமணத்துக்கு பின் சினிமாவை விட்டு விலகுகிறாரா கீர்த்தி சுரேஷ்?
இவர்களுக்கு திருமணம் ஆன பின்னர், அடுத்தடுத்து பல சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில், தற்போது திருமணத்திற்கு முன்னர் நாக சைதன்யா சோபிதாவுக்கு போட்ட முக்கிய கண்டீஷன் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் தான் திருமணத்திற்கு முன்பு நாக சைதன்யா தனக்கு போட்ட முக்கிய கண்டீஷன் குறித்து சோபிதா பேசியுள்ளார்.
சோபிதாவுக்கு நாக சைதன்யா போட்ட கண்டீஷன்:
நாகர்ஜுனா குடும்பம் ஒரு தெலுங்கு குடும்பம் என்றாலும், அவர்கள் தாய் மொழியை மிகவும் குறைந்த அளவிலேயே பேசுகிறார்களாம். அமலா பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் தன்னுடைய மகன் அகிலுடன் பேசுகிறார். அகிலும் அமெரிக்காவில் பிறந்தவர் என்பதால், ஆங்கிலத்தில் பேசுவதையே வழக்கமாக வைத்துள்ளார். அதனால் நாக சைதன்யாவுக்கு குடும்பத்தில் யாருடனும் அதிகம் தெலுங்கில் பேச வாய்ப்பு கிடைக்காமல் போனது.
சோபிதா தெலுங்கு நன்கு பேசுபவர் என்பதால், திருமணத்திற்கு முன்பே அவர் வீட்டில் இருக்கும் போது தெலுங்கில் தான் பேச வேண்டும் என்கிற கண்டீஷன் போட்டு திருமணம் செய்து கொண்டாராம். சோபிதாவும் இவரின் இந்த அன்பு கட்டளைக்கு இணங்க, ஆங்கிலத்தை தவிர்த்து தெலுங்கிலேயே பேசி வருவதாக கூறியுள்ளார்.