நேரடி ஹிந்தி படத்தில் நடிக்கிறாரா சூர்யா? இயக்குனர் குறித்து வெளியான லேட்டஸ்ட் தகவல்!
நடிகர் சூர்யா தற்போது நேரடி ஹிந்தி படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இந்த படத்தை இயக்க உள்ளது யார்? என்பது குறித்த தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.
கோலிவுட் நடிகர்கள் சமீப காலமாகவே பிற மொழி நேரடி படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது சூர்யா நேரடி ஹிந்தி படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் திரையுலகினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
சூர்யா தற்போது தன்னுடைய ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான பாலா இயக்கி வரும் ’வணங்கான்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு, விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த படத்தை தொடர்ந்து வரிசையாக அடுத்தடுத்த படங்களில் நடிக்க உள்ளார்.
மேலும் செய்திகள்: திருமணம் ஆகி குழந்தை பெற்ற பின்பும் குறையாத கிளாமர்! உச்ச கவர்ச்சியில் ஆர்யா மனைவி சாயிஷா வெளியிட்ட புகைப்படம்
அதில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'வாடிவாசல்' திரைப்படம் அனைவரும் எதிர்பாக்க கூடிய படங்களில் ஒன்று, இந்த படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவா, ஞானவேல், மற்றும் சுதா கொங்காரா ஆகியோர் இயக்கும் படங்களிலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அதில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'வாடிவாசல்' திரைப்படம் அனைவரும் எதிர்பாக்க கூடிய படங்களில் ஒன்று, இந்த படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவா, ஞானவேல், மற்றும் சுதா கொங்காரா ஆகியோர் இயக்கும் படங்களிலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்: ஹீரோயின் லுக்கில்... செம்ம ஸ்டைலிஷாக குட்டி நயன் அனிகாவை ஓரம் கட்டும் சூர்யாவின் ரீல் மகள் யுவினா பார்த்தவி!
தற்போது இந்த படத்திற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படும் நிலையில், இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால்... இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த படம் குறித்து தற்போது வரை, சூர்யா தரப்பில் இருந்தோ, இயக்குனர் தரப்பில் இருந்தோ எவ்வித அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிபிடித்தக்கது.