4 காவலர்களை திடீர் என வீட்டுக்கு அழைத்து நன்றி கூறிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! ஏன் தெரியுமா?
சூப்பர் ஸ்டார் ரஜினிக்காத 4 காவலர்களை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்து கொண்டது மட்டும் இன்றி தன்னுடைய நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.
chess
இந்தியாவில் முதல்முறையாக சர்வதேச அளவிலான 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. மாமல்லபுரத்தில் நேற்று துவங்கிய இந்த போட்டிகள் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 187 நாடுகளை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட சர்வதேச சதுரங்க விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்று விளையாட உள்ளனர்.
ஏற்கனவே கடந்த 19ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் ஜோதியை ஏற்றி பிரதமர் மோடி துவங்கி வைத்தார். இந்த ஜோதி நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களைக் கடந்து சென்னை வந்தடைந்தது.
மேலும் செய்திகள்: ராஷ்மிகாவை காதலிக்கும் விஜய் தேவரகொண்டா... ரகசியத்தை போட்டுடைத்த பிரபல நடிகை!
இந்நிலையில் நேற்று துவங்கிய இந்த போட்டிகளுக்காக கடந்த ஒரு வாரமாக வெளிநாடுகளில் இருந்து போட்டியாளர்கள் சென்னைக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். இவர்களுக்காக 3500 மேற்பட்ட உணவு வகைகள் கொண்ட மெனு தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒலிம்பியாட் போட்டிக்காக ஏ ஆர் ரகுமான் நம்ம சென்னை என்கிற ஆந்தம் வீடியோவை உருவாக்கி இருந்தார். விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள செஸ் தொடர்பான தீம் மியூசிக் ஆல்பம் நல்ல வரவேற்பை பெற்றது.
நேற்று துவங்கிய இந்த ஒலிம்பியாட் செஸ் போட்டி துவக்க விழாவில், பிரதமர் மோடி, ஆளுநர், முதலமைச்சர் ஸ்டாலின், உள்பட பல முக்கிய அரசியல் தலைவர்கள், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் செய்திகள்: ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் போட்ட வெள்ளை தாமரையாய்... ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் கிளாமர் காட்டும் நிதி அகர்வால்!
இந்நிலையில் இந்த செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் கலந்து கொள்ள நேற்று நேரு ஸ்டேடியம் செல்வதற்கு தனக்கு பாதுகாப்பு அளித்த போலீசாரை இன்று தன்னுடைய வீட்டுக்கு நேரில் வரவழைத்து நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்தார். மேலும் அவர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படமும் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.