நிறைவேறாமல் போன நடிகர் ராஜேஷின் கடைசி ஆசை
நடிகர் ராஜேஷ் இன்று காலை உடல்நலக்குறைவால் மரணமடைந்த நிலையில், அவரின் நிறைவேறாமல் போன கடைசி ஆசை என்ன என்பது தெரியவந்துள்ளது.

Actor Rajesh Last Wish
தமிழ் சினிமாவின் மூத்த நட்சத்திரமாக திகழ்ந்து வந்தவர் நடிகர் ராஜேஷ். கன்னிப் பருவத்திலே படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான இவர், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிப் படங்களில் நடித்திருக்கிறார். இவருடன் 47 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக அவர் நடித்த ‘அந்த 7 நாட்கள்’, தர்மதுரை, அவள் ஒரு தொடர்கதை உள்ளிட்ட படங்கள் மிகவும் பிரபலமானவை.
நடிகர் ராஜேஷ் காலமானார்
நடிகர் ராஜேஷ் ஒரு சினிமா நடிகராக மட்டுமல்லாமல், டப்பிங் கலைஞர், எழுத்தாளர், சின்னத்திரை நடிகர், ஜோதிடம் என அனைத்திலுமே சிறந்து விளங்கினார். 75 வயதான நடிகர் ராஜேஷுக்கு இன்று காலை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதை அறிந்த அவரது உறவினர்கள் நடிகர் ராஜேஷை, மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியில் நடிகர் ராஜேஷுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
ராஜேஷ் உடலுக்கு பிரபலங்கள் அஞ்சலி
நடிகர் ராஜேஷின் மறைவுச் செய்தி திரைத் துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரின் மறைவுக்கு ரஜினிகாந்த், டி.ராஜேந்தர் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர். அதேபோல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது அவரது குடும்பத்தாருக்கும் அவர் ஆறுதல் கூறினார். இந்த நிலையில், நடிகர் ராஜேஷின் நிறைவேறாத ஆசை என்ன என்பது தெரியவந்துள்ளது.
ராஜேஷின் கடைசி ஆசை
அதன்படி நடிகர் ராஜேஷுக்கு இயக்குனராக வேண்டும் என்கிற ஆசை இருந்ததாம். அதிலும் நடிகர் கமல்ஹாசனை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டாராம் ராஜேஷ், ஆனால் அவரின் அந்த ஆசை கடைசிவரை நிறைவேறாமலே போனது. நடிகர் ராஜேஷ், கமல்ஹாசனை இயக்காவிட்டாலும் அவர் இயக்கிய விருமாண்டி திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதுதவிர மகாநதி, சத்யா போன்ற படங்களிலும் கமலுடன் ராஜேஷ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.