14 வயதில் மகள் இருக்கும் நிலையில்... மீண்டும் குட் நியூஸ் சொன்ன நடிகர் நரேன்! வைரலாகும் புகைப்படம்!
நடிகர் நரேனுக்கு ஏற்கனவே, ஒரு 14 வயதில் தன்மையா என்கிற மகள் உள்ள நிலையில், 15 ஆவது திருமண நாளில் மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் தகவலை, புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளார் நரேன்.
narain
நடிகர் நரேன் 'நிழல்குத்து' என்கிற மலையாள திரைப்படத்தின் மூலம் தன்னுடைய சினிமா பயணத்தை துவங்கியவர். இதை தொடர்ந்து இவர் நடித்து வெளியான '4 தி பீப்பிள்' என்கிற திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெறவே, தமிழ் மற்றும் தெலுங்கில் டப் செய்து வெளியானது. திரையுலகில் நடிக்க துவங்கிய காலத்தில், மலையாளத்தில் ஹீரோவாக நடிக்கவில்லை என்றாலும் திறமையான நடிப்பை வெளிப்படுத்தினார்.
அப்படி தான் இவரது நடிப்பு மிஷ்கின் கண்ணில் பட, தான் தமிழில் இயக்கிய 'சித்திரம் பேசுதடி' படத்தில் இவரை ஹீரோவாக்கினார். இவரது முதல் படமே தமிழில் சூப்பர் ஹிட் வெற்றி பெறவே அடுத்தடுத்து தமிழில் இவருக்கு நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. இவர் தமிழில் அடுத்தடுத்து தேர்வு செய்து நடித்த 'நெஞ்சிருக்கும் வரை', 'பள்ளிக்கூடம்', 'அஞ்சாதே' போன்ற படங்கள் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று இவருக்கான மதிப்பை கூட்டியது.
மேலும் செய்திகள்: 'லிகர்' படத்தை விமர்சித்த அனசுயா... ஆன்ட்டி என கூறி வம்பிழுத்த விஜய் தேவரகொண்டா ரசிகர்கள்!
தொடர்ந்து மலையாள கவனம் செலுத்தி வந்ததால், தமிழில் பட வாய்ப்புகள் குறைய துவங்கியது. எனினும் ஹீரோவாக மட்டும் நடிக்காமல், வில்லன், மற்றும் குணச்சித்திர வேடங்களை தேர்வு செய்து நடிக்க துவங்கினார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான 'விக்ரம்' படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் 80 நாட்களை கடந்து, திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் நரேன் இன்று தன்னுடைய 15 ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடி வரும் நிலையில், இவர் தன்னுடைய மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ள தகவலை வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். ஆகஸ்ட் 26, 2007 ஆண்டு கோழிக்கோட்டில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளரான மஞ்சு என்பவரை திருமணம் செய்து கொண்ட நரேனுக்கு 14 வயதில் தன்மையா என்கிற மகள் ஒருவர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: BiggBoss 6: பிக்பாஸ் வீட்டிற்குள் சாமானியனாக செல்ல... இவை தான் முக்கிய தகுதியா?
மகள் பிறந்து 10 ஆண்டுகளுக்கு மேல் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருந்த இந்த தம்பதி மீண்டும் குட் நியூஸ் கூறியதை தொடர்ந்து, ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.