'லிகர்' படத்தை விமர்சித்த அனசுயா... ஆன்ட்டி என கூறி வம்பிழுத்த விஜய் தேவரகொண்டா ரசிகர்கள்!

பிரபல தொகுப்பாளினியும், நடிகையுமான அனுசுயா நேற்று திரைக்கு வந்த, 'லிகர் ' படத்தை விமர்சித்ததை தொடர்ந்து, விஜய் தேவரகொண்டா ரசிகர்கள், அவரை 'ஆன்ட்டி' என கூறி சமூக வலைத்தளத்தில் வம்பிழுத்து வருகிறார்கள். 
 

Anasuya Bharadwaj warns Vijay Deverakonda fans for calling her 'aunty'

பிரபல தொகுப்பாளினியும், 'புஷ்பா' படத்தில் வெறித்தனமான நடிப்பை வெளிப்படுத்திய நடிகையுமான அனசுயா பரத்வாஜ், ஏற்கனவே விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்த 'அர்ஜுன் ரெட்டி' படம் குறித்து  கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியவர். பின்னர் இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதால், அனசுவாவை கொஞ்சம் அதிகமாகவே கலாய்த்து தள்ளினர் விஜயதேவரகொண்டாவின் ரசிகர்கள்.

Anasuya Bharadwaj warns Vijay Deverakonda fans for calling her 'aunty'

மேலும் செய்திகள்: BiggBoss 6: பிக்பாஸ் வீட்டிற்குள் சாமானியனாக செல்ல... இவை தான் முக்கிய தகுதியா?

இந்த சண்டை தற்போது மீண்டும் 'லிகர்' படத்தின் மூலம் துவங்கியுள்ளது. விஜய் தேவரகொண்டா நடிப்பில் நேற்று பான் இந்தியா படமாக வெளியான, இந்த படம் தொடர்ந்து, மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது. பல நெட்டிசன்கள் இந்த படம் குறித்து மீம்ஸ் போட்டு ட்ரோல் செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் நடிகை அனசூயாவும், படத்தை விமர்சித்து ட்வீட் செய்தார். இதனால், விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்கள் கோபமாகி, அனசூயாவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் ட்வீட் செய்து அவரின் வயதை குறிப்பிட்டு 'ஆன்ட்டி' என கூறி கலாய்க்க துவங்கி விட்டனர். #Aunty என்கிற ஹாஷ்டேக்கும் ட்ரெண்ட் ஆகியது.

Anasuya Bharadwaj warns Vijay Deverakonda fans for calling her 'aunty'

மேலும் செய்திகள்: இந்த அநீதியை இன்னொரு தாய்க்கு இழைக்காதீர்கள்..! வலி... வேதனையோடு.. சந்திரமுகி பொம்மி போட்ட பழைய பதிவு!

இதனால் கோபமான நடிகை அனுசுயா  ‘என்னை அவமானப்படுத்திய வார்த்தைகளை உங்கள் ஹீரோவுக்கு அனுப்புங்கள்’ என்று கமெண்ட் போட்டுள்ளார். ஆனாலும், அனசூயா மீதான ட்ரோலிங் நிற்காமல் சென்று கொண்டு தான் இருக்கிறது. இப்படி தன்னை தொடர்ந்து ட்ரோல் செய்பவர்களின் ட்விட்டர் பதிவை,  ஸ்கிரீன்ஷாட் எடுத்து வருவதாகவும், என் வயதை குறிப்பிட்டு 'ஆன்ட்டி' என்று அழைப்பவர்கள்  அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்வேன். இதுவே உங்களுக்கு கடைசி எச்சரிக்கை என தன்னுடைய கோவத்தை இணையத்தில் வெளிப்படுத்தி வருகிறார். இந்த வார்த்தை போர் சமூக வளைத்ததில் தொடர்ந்து வரும் நிலையில்... இது எங்கு போய் முடியுமோ..? என பலர் தங்களது கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios