MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • BiggBoss 6: பிக்பாஸ் வீட்டிற்குள் சாமானியனாக செல்ல... இவை தான் முக்கிய தகுதியா?

BiggBoss 6: பிக்பாஸ் வீட்டிற்குள் சாமானியனாக செல்ல... இவை தான் முக்கிய தகுதியா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த முறை சாமானிய மக்களும் கலந்து கொள்ள வாய்ப்பு கொடுக்க படுவதாக வெளியான தகவலை தொடர்ந்து, இதற்க்கு என்ன தகுதி இருக்கும்... என்பதே, பலரது கேள்வியாக உள்ளது. இந்நிலையில் இதுகுறித்த சில தகவல்கள் தற்போது வெளியாகி வருகிறது.  

2 Min read
Author : manimegalai a
Published : Aug 26 2022, 08:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

இந்தியில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி, தற்போது தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்டபோது சில விமர்சனங்களுக்கு ஆளானாலும், நடிகர் கமல்ஹாசன் இதனை சரியான புரிதலை மக்களிக்கிடம் எடுத்து கூறி இந்த நிகழ்ச்சி மீது அவர்களுக்கு ஆர்வத்தை தூண்டினார்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

அந்த வகையில் பிக்பாஸ் முதல் சீசனுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. ஆனால் அடுத்தடுத்து... ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும் மிகவும் கவனத்துடன் விளையாடி வருவதால், ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் நிகழ்ச்சி பார்க்கும் ஆர்வம் குறைந்து கொண்டே வருகிறது.

மேலும் செய்திகள்: இந்த அநீதியை இன்னொரு தாய்க்கு இழைக்காதீர்கள்..! வலி... வேதனையோடு.. சந்திரமுகி பொம்மி போட்ட பழைய பதிவு!
 

35

பிக்பாஸ் நான்கு சீசன்களில் மக்களுக்கு பிரபலமான நடிகர்கள் நடிகைகள் சீரியல் பிரபலங்கள் பாடகர்கள், டான்ஸ் மாஸ்டர், மாடல், தொகுப்பாளர், மற்றும் செய்தி வாசிப்பாளர்கள் கலந்து கொண்ட நிலையில், சீசன் 5 நிகழ்ச்சியில் சற்று வித்தியாசமாக கானா பாடகி, தெருக்கூத்து கலைஞர் மற்றும் யூ டியூப் பிரபலம் ஆகியோர் கலந்து கொண்டது ஆச்சர்யமாக பார்க்கப்பட்டது.
 

45

இதை தொடர்ந்து, விரைவில் துவங்க உள்ள பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில்... யாரும் எதிர்பாராத வண்ணம் சாமானிய மக்களும் கலந்து கொள்ளும் வாய்ப்பு கொடுக்க உள்ளதாக நேற்று ப்ரோமோ ஒன்றை வெளியிட்டு விஜய டிவி அறிவித்தது. இதை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல வாய்ப்பு கிடைக்காதா? என ஏங்கிய பல இளைஞர்கள், இளம் பெண்கள், மற்றும் பலர் விண்ணப்பித்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்: உடலில் ஏகப்பட்ட காயங்கள்... பிக்பாஸ் பிரபலத்தின் பிரேத பரிசோதனையில் வெளியான பகீர் தகவல் ! இருவர் அதிரடி கைது!
 

55

இது ஒருபுறம் இருக்க...பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நினைக்கிறீர்கள் என்கிற காரணத்தை கூறி வீடியோ பதிவேற்ற விஜய் டிவி  அறிவித்துள்ளது. அதாவது பிக் போஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நினைக்கும் அந்த சாமானியன்... ஏதேனும் சாதிக்க துடிக்கும் நபராக இருந்தால், அவருக்கு முன்னுரிமை கொடுக்க வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. நடிக்கும் ஆர்வம், திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் உள்ள சிலருக்கு விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சி வாய்ப்புகள் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  எனவே இந்த முறை, யார் யார் கலந்து கொள்வார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் .

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Lenin Pandiyan Review : சிவாஜி பேரன் ஹீரோவாக பாஸ் ஆனாரா? ஃபெயில் ஆனாரா? லெனின் பாண்டியன் விமர்சனம்
Recommended image2
Dorothy Movie First Review : டோரதி முதல் விமர்சனம் வந்தாச்சு... படம் ஒர்த்தா? ஒர்த் இல்லையா?
Recommended image3
Divya Sathyaraj : பயில்வான் ரங்கநாதன் எதிராக திவ்யா சத்யராஜ் தொடர்ந்த ரூ.1 கோடி மானநஷ்ட வழக்கு... அதிரடி உத்தரவு பிறப்பித்த ஐகோர்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved