MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • உடலில் ஏகப்பட்ட காயங்கள்... பிக்பாஸ் பிரபலத்தின் பிரேத பரிசோதனையில் வெளியான பகீர் தகவல் ! இருவர் அதிரடி கைது!

உடலில் ஏகப்பட்ட காயங்கள்... பிக்பாஸ் பிரபலத்தின் பிரேத பரிசோதனையில் வெளியான பகீர் தகவல் ! இருவர் அதிரடி கைது!

மாரடைப்பால் மரணமடைந்ததாக கூறப்பட்ட பிக்பாஸ் பிரபலம் சோனாலி போகத்தின், பிரேத பரிசோதனை தகவலில் வெளியான பகீர் தகவலை தொடர்ந்து, இருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

2 Min read
Author : manimegalai a
| Updated : Aug 26 2022, 03:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

கோவாவிற்கு சுற்றுலா சென்ற போது, திடீர் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்ததாக கூறப்பட்ட பிக் நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான சோனாலி போகத், கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

பிக்பாஸ் 14 வது சீசனில் வயல் கார்டு போட்டியாளராக கலந்து கொண்டு, ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் பிரபல நடிகையும் பாஜக பிரமுகருமான சோனாலி போகத். இவரது மரணம் குறித்த முதல் கட்ட விசாரணையின் போது, அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதை அடுத்து சோனாலி போகத்தின் தாயார், அவர் உணவு சாப்பிட்டபின் அசௌகரியமாக இருப்பதாக தன்னிடம் போனில் கூறியதாக சொன்ன தகவல், பல்வேறு சந்தேகங்களுக்கு வழி வகுத்தது.

மேலும் செய்திகள்: அசர வைக்கும் 'பொன்னியின் செல்வன்' ஐஸ்வர்யா ராய்யின்... நந்தினி தோற்றம்! வைரலாகும் BTS போட்டோஸ்!
 

35

இதைத்தொடர்ந்து அவரது சகோதரர் ரிங்கு தத்தா  தன்னுடைய சகோதரி மரணத்தின் மீது சந்தேகம் உள்ளதாகவும், அவரது உதவியாளர்கள் இரண்டு பேர் தான் தன்னுடைய சகோதரியை கொலை செய்ததாக போலீசில் புகார் அளித்தார். இந்த தகவல் ஏற்கனவே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வந்தனர்.
 

45

இந்நிலையில் கோவா மருத்துவ கல்லூரியில் நடந்து முடிந்த சோனாலி போகத்தின் பிரேத பரிசோதனை முடிவில், சோனாலி மாரடைப்பு காரணமாக இறக்கவில்லை என்பது வெட்டா வெளிச்சம் ஆகியுள்ளது. மேலும் அவரது உடலில் பல காயங்கள் இருப்பதாகவும் எனவே சோனாலி போகத்தை பலவந்தப்படுத்தி இருப்பதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் வெளியானது.  எனவே இது நிச்சயம் ஒரு படுகொலையாக தான் இருக்கும் என போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஏற்கனவே சோனாளியின் கணவர் மரணத்தில் மர்மம் நீடித்து வரும் நிலையில், தற்போது சோனாலியின் மர்ம மரணமும் பரபரப்பு ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்: கருப்பு நிற ட்ரான்ஸ்பரென்ட் சேலையில்... லைட்டாக இடையை காட்டி குஷி ஜோதிகாவுக்கே டஃப் கொடுக்கும் வாணி போஜன்!
 

55

சோனாலி போகத்தின் சகோதரர் ரிங்கு தத்தா கொடுத்த புகாரின் அடிப்படையில் சோனாலியின் உதவியாளர்களான சுதீர் சக்வான் மற்றும் சுக்விந்தர் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், எனவே இந்த கொலைக்கு பின்னணி என்ன என்பது தெரியவரும் என கூறப்படுகிறது. மேலும் நடிகையும் பாஜக பிரபுகரமான சோனாலி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளாரா? என்ற கோணத்திலும் போலீசார் தங்களது விசாரணையை நடத்தி வருகின்றனர் என்பது குறிபிடித்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Karuppu : இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்டு கருப்பு பட காட்சிக்கு கத்திரி போட்ட படக்குழு - பின்னணி என்ன?
Recommended image2
Ganja Karuppu : விபத்தில் உயிரிழந்த தம்பி... விஜய் அரசுக்கு கண்ணீருடன் கஞ்சா கருப்பு வைத்த கோரிக்கை
Recommended image3
Karuppu OTT release : டெலிடட் சீன்களுடன் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் கருப்பு? எப்போ தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved