அசர வைக்கும் 'பொன்னியின் செல்வன்' ஐஸ்வர்யா ராய்யின்... நந்தினி தோற்றம்! வைரலாகும் BTS போட்டோஸ்!
'பொன்னியின் செல்வன் 1' திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், தற்போது படப்பிடிப்பு தளத்தின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இயக்குனர் மணிரத்னத்தின் சரித்திரப் திரைப்படமான பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக எடுத்து முடிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் பாகம் செப்டம்பர் 30-ஆம் தேதி பிரமாண்டமாக ரிலீஸுக்குத் தயாராக உள்ளது. கிட்டத்தட்ட படம் வெளியாவதற்கு முன்னதாக, ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் ஆகியோர் அடங்கிய பி.டி.எஸ் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். அவர் படத்தில் நந்தினி மற்றும் மந்தாகினி தேவியாக நடிக்கிறார். இணையதளத்தில் கசிந்துள்ள இந்த புகைப்படத்தின் மூலம், நந்தினியாக நடித்துள்ள நடிகை ஐஸ்வர்யா ராய்யின் முழுமையான தோற்றத்தை காண முடிகிறது. ஒளிப்பதிவாளர் ரவி வர்மனுடன் போஸ் கொடுத்தபடி அமர்ந்துள்ளார். இதை தொடர்ந்து இன்னும் சில படப்பிடிப்பு தள புகைப்படங்களும வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகள்: பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருப்பமா? விஜய் டிவி வெளியிட்ட அதிகார பூர்வ அறிவிப்பு!
நடிகர் கார்த்தி மற்றும் விக்ரம் ஆகிய இருவரும் கோட்டை முன்பு குதிரையில் அமர்ந்திருக்கும் படியான புகைப்படமும், இயக்குனர் மணிரத்னம்... நடிகர் ஜெயராமுடன் பேசி கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படமும் வெளியாகியுள்ளது. திரைப்படத்தின் ரிலீஸ் நெருங்கி வரும் நிலையில், திடீர் என இப்படி படப்பிடிப்பு தளத்தின் புகைப்படங்கள் வெளியாவது, படக்குழுவினரை உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கதாசிரியர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் தமிழ் இலக்கியப் நாவலான, பொன்னியின் செல்வனை திரைப்படமாக்க வேண்டும் என்பது மணிரத்னத்தின் கனவாக இருந்த நிலையில், ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு பிறகு, பொன்னியின் செல்வன் கதையை இரண்டு பாகங்களாக எடுத்து முடித்துள்ளார். இதன் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஐஸ்வர்யா ராய் பச்சன், சியான் விக்ரம், த்ரிஷா, ஜெயம் ரவி மற்றும் கார்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் படத்தின் டீசர் மற்றும் பொன்னி நிதி மற்றும் சோழ சோழ ஆகிய இரண்டு பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: கருப்பு நிற ட்ரான்ஸ்பரென்ட் சேலையில்... லைட்டாக இடையை காட்டி குஷி ஜோதிகாவுக்கே டஃப் கொடுக்கும் வாணி போஜன்!