நான் ரெடி.... விஜய் ரெடியா? தளபதி உடனான 15 வருட பிரச்சனை குறித்து மனம்திறந்த நெப்போலியன்
போக்கிரி பட சமயத்தில் ஏற்பட்ட சண்டைக்கு பின் நடிகர் விஜய்யுடன் சேர்ந்து நடிக்காமல் இருந்து வரும் நெப்போலியன், சமீபத்திய பேட்டியில் விஜய் குறித்து பேசி உள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நெப்போலியன். இவர் தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். அங்கு ஐடி நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். சமீபத்தில் யூடியூபர் இர்பான் அவரது வீட்டுக்கு சென்று அவரது வீட்டை வீடியோ எடுத்து பதிவேற்றி இருந்தார். அப்போது நெப்போலியன் தனது மாற்றுத்திறனாளி மகனுக்காக வீட்டில் என்னென்ன மாற்றம் செய்துள்ளார் என்பதை பார்த்து அனைவரும் வியந்து போயினர். அந்த வீடியோவும் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது.
அந்த வீடியோ வைரல் ஆனதற்கு பின் பல்வேறு பேட்டிகளைக் கொடுத்து வருகிறார் நெப்போலியன். அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் போக்கிரி பட சமயத்தில் ஏற்பட்ட சண்டைக்கு பின் நடிகர் விஜய்யுடன் சேர்ந்து நடிக்காமல் இருந்து வரும் நெப்போலியன், வாய்ப்பு வந்தால் மீண்டும் சேர்ந்து நடிப்பாரா என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு நெப்போலியன் அளித்த பதில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... ஜெயிலர் அப்டேட்... ரஜினியை அடிக்க பாலிவுட்டில் இருந்து பிரபல வில்லன் நடிகரை களமிறக்கிய நெல்சன்
நெப்போலியன் பேசியதாவது : “போக்கிரி படத்தின் போது ஒரு சம்பவம் நடந்தது. அதற்கு பின் நானும் விஜய்யும் பேசிக்கொள்வதில்லை. அதனால் அவரது படங்கள் எதுவும் நான் பார்ப்பதில்லை. விஜய் ரெடினா... அவரோடு எப்போ வேண்டுமானாலும் பேச நான் ரெடி. அவருடன் இணைந்து நடிக்க நான் ரெடி... விஜய் அதற்கு ரெடியானு அவர்கிட்ட தான் கேட்கனும். ஏன்னே அவர் பெற்ற தாய், தகப்பனிடமே பேசாமல் இருக்கிறாரே.
இன்றைக்கு ஊர், உலகமெல்லாம் அதைப்பற்றி தான் பேசுகிறது. அது உண்மையா, பொய்யானு கூட எனக்கு தெரியாது. ஆனா அமெரிக்கா வரைக்கு அந்த செய்தி வந்திருக்கு. முதலில் அவர் தாய், தகப்பனுடன் சமரசம் ஆகட்டும். அதன்பின் யோசிப்போம். எனக்கு விஜய்க்கு ஏற்பட்ட மோதல் நடந்து 15 வருஷம் ஆகிவிட்டது. இவ்ளோ நாள் இடைவெளிக்கு பின் விஜய் என்னுடன் பேச தயாராக இருப்பாரா என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் பேச நான் ரெடி” என தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... அஜித் படத்தில் இருந்து நீக்கப்பட்ட விக்கி... நயன்தாராவின் சமரச பேச்சுக்கும் செவி சாய்க்காத லைகா..?