MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஜெயிலர் அப்டேட்... ரஜினியை அடிக்க பாலிவுட்டில் இருந்து பிரபல வில்லன் நடிகரை களமிறக்கிய நெல்சன்

ஜெயிலர் அப்டேட்... ரஜினியை அடிக்க பாலிவுட்டில் இருந்து பிரபல வில்லன் நடிகரை களமிறக்கிய நெல்சன்

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர், பான் இந்தியா படமாக தயாராகி வருவதால், இதில் பிறமாநில நடிகர்களையும் நடிக்க வைத்து வருகின்றனர். 

1 Min read
Author : Ganesh A
Published : Jan 29 2023, 10:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நடிகர் ரஜினிகாந்த், தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயனின் டாக்டர், விஜய் நடித்த பீஸ்ட் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் தான் ஜெயிலர் படத்தையும் இயக்கி வருகிறார். ரஜினியுடன் அவர் இணையும் முதல் படம் இது என்பதால், வித்தியாசமான கதையம்சத்துடன் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது ஜெயிலர் திரைப்படம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் ரஜினியுடன் ரம்யாகிருஷ்ணன், வஸந்த் ரவி, யோகிபாபு, ரோபோ ஷங்கர், தமன்னா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை, கடலூர், ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பை நடத்திய படக்குழு அடுத்தகட்டமாக ராஜஸ்தானில் ஷூட்டிங்கை நடத்த உள்ளது.

இதையும் படியுங்கள்... அஜித் படத்தில் இருந்து நீக்கப்பட்ட விக்கி... நயன்தாராவின் சமரச பேச்சுக்கும் செவி சாய்க்காத லைகா..?

34

ஜெயிலர் பான் இந்தியா படமாக தயாராகி வருவதால், இதில் பிறமாநில நடிகர்களையும் நடிக்க வைத்து வருகின்றனர். அதன்படி ஏற்கனவே மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர்ஸ்டார் ஷிவ ராஜ்குமார் மற்றும் தெலுங்கு வில்லன் நடிகர் சுனில் ஆகியோர் இப்படத்தில் நடிக்க கமிட் ஆன நிலையில், தற்போது பாலிவுட் பிரபலம் ஒருவரையும் வில்லனாக களமிறக்கி உள்ளார் நெல்சன்.

44

அதன்படி ஜெயிலர் படத்தில் பிரபல பாலிவுட் வில்லன் நடிகர் ஜாக்கி ஷெராஃப் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே தமிழில் விஜய்க்கு வில்லனாக பிகில் படத்தில் நடித்திருந்தார். ஜாக்கி ஷெராஃப் இணைந்துள்ளதன் மூலம் ஜெயிலர் படம் பான் இந்தியா படமாக தயாராகி வருவது உறுதியாகி உள்ளது. இப்படத்தை வருகிற ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.

இதையும் படியுங்கள்... விக்னேஷ் சிவனை லைகா கழட்டிவிடுவது இது முதல்முறை அல்ல... 3 வருஷத்துக்கு முன் இதேபோல் நடந்த சம்பவம் தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ரஜினிகாந்த்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Muthukalai Wife Death : சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மனைவி... வலி தாங்க முடியாமல் கதறி அழுத நடிகர் முத்துக்காளை
Recommended image2
This Week OTT Releases : மே 18 முதல் 24 வரை இந்த வாரம் ஓடிடியில் போட்டிபோட்டு ரிலீஸ் ஆகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் இதோ
Recommended image3
Karuppu Box Office Collection : கங்குவா லைஃப்டைம் வசூலை 3 நாளில் வாரிசுருட்டிய கருப்பு... பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த சூர்யா..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved