MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விக்னேஷ் சிவனை லைகா கழட்டிவிடுவது இது முதல்முறை அல்ல... 3 வருஷத்துக்கு முன் இதேபோல் நடந்த சம்பவம் தெரியுமா?

விக்னேஷ் சிவனை லைகா கழட்டிவிடுவது இது முதல்முறை அல்ல... 3 வருஷத்துக்கு முன் இதேபோல் நடந்த சம்பவம் தெரியுமா?

லைகா நிறுவனம் விக்னேஷ் சிவன் உடன் படம் பண்ணுவதாக அறிவித்து பின்னர் ஷூட்டிங் தொடங்கும் முன்பே கழட்டிவிடுவது இது முதன்முறை அல்ல. 

2 Min read
Author : Ganesh A
Published : Jan 29 2023, 08:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

சிம்புவின் போடா போடி படம் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் விக்னேஷ் சிவன். இதையடுத்து நயன்தாராவை வைத்து இவர் இயக்கிய நானும் ரெளடி தான் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படத்தின் வெற்றிக்கு பின் சூர்யா உடன் கூட்டணி அமைத்த விக்கி, தானா சேர்ந்த கூட்டம் என்கிற படத்தை இயக்கினார். கடந்த 2018-ம் ஆண்டு வெளியான இப்படம் தோல்வியடைந்தது.

25

பின்னர் 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் அவர் இயக்கி வெளியிட்ட படம் தான் காத்துவாக்குல ரெண்டு காதல், கடந்தாண்டு ரிலீஸ் ஆன இப்படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படமும் பெரியளவில் சோபிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இதையடுத்து அவருக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் அஜித்தின் ஏகே 62 திரைப்படம்.

35

கடந்தாண்டு மே மாதம் அஜித் படத்தை இயக்க கமிட் ஆனார் விக்கி. அதன்பின் 8 மாத இடைவெளிக்கு பின்னர் தான் ஷூட்டிங்கை தொடங்க திட்டமிட்டு இருந்தனர். இந்த 8 மாத கேப்பில் அஜித் படத்துக்காக விக்னேஷ் சிவன் தயார் செய்திருந்த ஸ்கிரிப்ட் அஜித்துக்கும், தயாரிப்பு நிறுவனத்துக்கும் சுத்தமாக பிடிக்காததால், அவரை ஏகே 62 படத்தில் இருந்து அதிரடியாக நீக்கி உள்ளனர். இதனால் செம்ம அப்செட்டில் உள்ளாராம் விக்கி.

இதையும் படியுங்கள்... AK 62 படத்தை இயக்க வந்த திடீர் அழைப்பு... விஜய்காக எழுதிய கதையை அஜித்துக்கு சொல்லி ஓகே வாங்கிய பிரபல இயக்குனர்

45

லைகா நிறுவனம் விக்னேஷ் சிவன் உடன் படம் பண்ணுவதாக அறிவித்து பின்னர் ஷூட்டிங் தொடங்கும் முன்பே கழட்டிவிடுவது இது முதன்முறை அல்ல. இதற்கு முன்பே இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு லைகா நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்க இருந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக அறிவிப்பும் வெளியானது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும், 2020-ம் ஆண்டு இப்படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் கூறி இருந்தனர்.

55

ஆனால் படத்தின் பட்ஜெட் அதிகரித்ததால் ஷூட்டிங் தொடங்கும் முன்பே அப்படம் கைவிடப்படுவதாக அறிவித்தது லைகா. அதேபோன்ற ஒரு நிலை தான் தற்போது ஏகே 62 படத்துக்கும் வந்துள்ளது. இப்படத்தை சுமார் 200 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க லைகா திட்டமிட்டிருந்த நிலையில், விக்கி சொன்ன கதை அந்த அளவுக்கு திருப்தி அளிக்காததால், தற்போது அவரை கழட்டிவிட்டு, மகிழ் திருமேணியை கமிட் செய்துள்ளனர். இதன்மூலம் விக்னேஷ் சிவனுக்கு ராசியில்லாத தயாரிப்பு நிறுவனமாக லைகா மாறி உள்ளது.

இதையும் படியுங்கள்... விக்கியும் வேண்டாம்... விஷ்ணு வேண்டாம்... AK 62 படத்திற்காக புது இயக்குனருக்கு ஓகே சொன்ன அஜித்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிவகார்த்திகேயன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கார்த்திகை தீபம் அப்டேட்: அம்மாவுக்காக கருவை கலைக்கத் துணிந்த ரோகிணி! கார்த்திக்கிடம் சிக்கிய உண்மை - விறுவிறுப்பான எபிசோட்!
Recommended image2
அரிசி வாங்கக் கூட காசு இல்ல; இன்று கோடிகளில் சொத்து! வறுமையை வென்று சாதித்த நடிகர் சிங்கமுத்துவின் வாழ்க்கை கதை!
Recommended image3
அஜித் - விஜய் இருவரும் சேர்ந்து நடித்த 'அந்த' சூப்பர் ஹிட் படங்கள் எவை? இதோ முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved