AK 62 படத்தை இயக்க வந்த திடீர் அழைப்பு... விஜய்காக எழுதிய கதையை அஜித்துக்கு சொல்லி ஓகே வாங்கிய பிரபல இயக்குனர்
ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்கப்பட உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், திடீரென ஏகே 62 படத்தில் இருந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
துணிவு படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் அஜித், அடுத்ததாக நடிக்க இருந்த திரைப்படம் ஏகே 62. இப்படத்திற்கான அறிவிப்பு கடந்தாண்டு மே மாதம், நடிகர் அஜித்தின் பிறந்தநாளன்று வெளியானது. அதன்படி இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், இதனை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாகவும், அனிருத் இப்படத்திற்கு இசையமைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்பின் சமீபத்தில் இப்படத்தில் சந்தானம், அரவிந்த் சாமி ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், கடந்த இரு தினங்களாகவே கோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக உள்ளது அஜித்தின் ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டுள்ளார் என்கிற செய்தி தான். ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்கப்பட உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், திடீரென இயக்குனர் நீக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காரணம் விக்னேஷ் சிவன் சொன்ன கதை அஜித்துக்கும், லைகா நிறுவன தலைவர் சுபாஸ்கரனுக்கும் சுத்தமாக பிடிக்கவில்லையாம்.
இதையும் படியுங்கள்... விக்கியும் வேண்டாம்... விஷ்ணு வேண்டாம்... AK 62 படத்திற்காக புது இயக்குனருக்கு ஓகே சொன்ன அஜித்!
8 மாதம் டைம் கொடுத்தும் கதையை திருப்திகரமாக தயார் செய்யாததன் காரணமாக, படப்பிடிப்பு தொடங்கும் முன்பே, இயக்குனரை மாற்றும் முடிவுக்கு அஜித்தும், சுபாஸ்கரனும் வந்துள்ளனர். இதையடுத்து தான் அஜித்துக்கு கதை கூறுமாறு இயக்குனர் மகிழ் திருமேனிக்கு அழைப்பு வந்துள்ளது. இந்த அழைப்பால் மிகவும் உற்சாகம் அடைந்த மகிழ் திருமேனி, தன்னிடம் இருந்த ஒரு மாஸான திரில்லர் கதையை கூறி இருக்கிறார். இந்தக் கதை அஜித்துக்கும், சுபாஸ்கரனுக்கும் பிடித்துப் போனதால், அவர்கள் ஏகே 62 படத்தை இயக்கும் வாய்ப்பை மகிழ் திருமேனிக்கு கொடுத்துவிட்டார்களாம்.
இயக்குனர் மகிழ் திருமேனி ஏற்கனவே பீஸ்ட் பட சமயத்தில் விஜய்க்காக ஒரு மாஸான கதையை தயார் செய்து வைத்திருந்தார். ஆனால் அப்போது கலகத் தலைவன் படத்தில் பிசியானதால் அவரால் விஜய் படத்தை இயக்க முடியாமல் போனது. அந்த மாஸான கதையை தான் தற்போது ஏகே 62 படத்துக்காக அஜித்துக்கு சொல்லி ஓகே வாங்கி இருக்கிறாராம் மகிழ் திருமேனி. இந்தக் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில தினங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... ரஜினியின் பெயர், போட்டோ, குரலை, பயன்படுத்த அதிரடி தடை! மீறினால் நடவடிக்கை..!