துணிவு - வாரிசு படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் இல்லை.. முதலில் களமிறங்குவது யார்?- ஷாக்கிங் தகவலை வெளியிட்ட பிரபலம்
பொங்கல் பண்டிகைக்கு துணிவு - வாரிசு படங்கள் நேருக்கு நேர் மோத உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அப்படங்கள் ஒன்றாக ரிலீஸ் ஆகாது என பிரபல நடிகர் கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள வாரிசு படத்தை வம்சி இயக்கி உள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, குஷ்பு, பிரபு, ஷியாம், சரத்குமார், பிரகாஷ்ராஜ், சங்கீதா, சம்யுக்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாக உள்ளது.
இப்படத்திற்கு போட்டியாக அஜித்தின் துணிவு படமும் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். இதில் அஜித் உடன் மஞ்சு வாரியர், பிக்பாஸ் பிரபலங்கள் பாவனி, அமீர், சிபி ஆகியோருக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதையும் படியுங்கள்... துப்பாக்கி கவுண்டரின் வாழ்க்கை வரலாற்றை காப்பி அடித்து தான் RRR படம் எடுத்தாரா ராஜமவுலி?- கிளம்பிய புதுசர்ச்சை
இந்த இரண்டு படங்களும் வருகிற 2023-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு நேருக்கு நேர் மோத உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சி உள்ளதால் இரு படங்களின் ரிலீஸ் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகாது என நடிகர் மகத் ராகவேந்திரா தெரிவித்துள்ளார்.
சமீபத்திய பேட்டியில் அவர் கூறியதாவது : “துணிவு படம் தான் முதலில் ரிலீஸ் ஆகும் என நான் கேள்விப்பட்டேன். வாரிசு படம் மூன்று அல்லது நான்கு நாள் தள்ளி ரிலீஸ் ஆகும் என கேள்விப்பட்டேன் என தெரிவித்துள்ளார்”. நடிகர் மகத் அஜித்துடன் மங்காத்தா படத்திலும், விஜய் உடன் ஜில்லா படத்திலும் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... துணிவு படத்தில் அஜித் ஹீரோவா? வில்லனா? - இயக்குனர் எச்.வினோத் ஓபன் டாக்