Karthi : தீபாவளி ரேஸில் அஜித்துடன் மோதல்! 3 மாதங்களில் 3 படங்கள் ரிலீஸ் என கோலிவுட்டை அதகளப்படுத்தும் கார்த்தி
Karthi : நடிகர் கார்த்தி நடித்துள்ள மூன்று படங்கள் அடுத்தடுத்த மாதங்களில் ரிலீசாக உள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்தாண்டு சுல்தான் படம் மட்டுமே ரிலீஸ் ஆனது. இதையடுத்து வரிசையாக படங்களில் நடிக்க கமிட் ஆன கார்த்தி, தற்போது விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் என அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதில் விருமன், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் பிசியாக நடைபெற்று வருகிறது.
ஆகஸ்டில் விருமன்
இதில் முதலாவதாக அவர் நடித்துள்ள விருமன் படம் ரிலீசாக உள்ளது. இப்படத்தை முத்தையா இயக்கி உள்ளார். இப்படத்தின் மூலம் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். 2டி நிறுவனம் சார்பில் சூர்யா - ஜோதிகா தயாரித்துள்ள இப்படம் வருகிற ஆகஸ்ட் 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று ரிலீசாக உள்ளது.
செப்டம்பரில் பொன்னியின் செல்வன்
அடுத்ததாக மணிரத்தின் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கார்த்தி. மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகி உள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி ரிலீசாக உள்ளது.
தீபாவளிக்கு சர்தார்
நடிகர் கார்த்தி இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார். அவரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள சர்தார் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 24-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அன்றைய தினம் அஜித்தின் ஏகே 61 படமும் ரிலீசாக உள்ளதால், பாக்ஸ் ஆபிஸில் சர்தார் - ஏகே61 படங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் கார்த்தி நடித்துள்ள மூன்று படங்கள் அடுத்தடுத்த மாதங்களில் ரிலீசாக உள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இதுதவிர இப்படங்களின் ரிலீசுக்கு பின் கோலிவுட்டில் அவரது மார்க்கெட் பன்மடங்கு உயர்ந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... ஒருவேள பேண்ட் போட மறந்துட்டாங்களோ..! கவர்ச்சியாக போஸ் கொடுத்த டிக்கிலோனா நடிகையை கழுவி ஊற்றூம் நெட்டிசன்ஸ்