Actor Karthi : என்ன லவ் பண்ணவே விடல... 6 வருஷம் தேடியும் பொண்ணு கிடைக்கல - சீக்ரெட் தகவலை வெளியிட்ட கார்த்தி
Actor Karthi : தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி, தான் காதல் திருமணம் செய்துகொள்ளாததற்காக காரணம் பற்றி மனம்திறந்து பேசி உள்ளார்.
நடிகர் சிவகுமாரின் இளைய மகனான கார்த்தி, சினிமாவின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக முதலில் இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக சேர்ந்தார். இதையடுத்து அமீர் இயக்கத்தில் கடந்த 2007-ம் ஆண்டு ரிலீசான பருத்திவீரன் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அவர் நடித்த முதல் படமே பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு, தேசிய விருதையும் வென்றது.
இதையடுத்து நடிப்பில் கவனம், செலுத்த ஆரம்பித்த கார்த்தி பையா, ஆயிரத்தில் ஒருவன், நான் மகான் அல்ல, தீரன் அதிகாரம் ஒன்று, சிறுத்தை என தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்தார். இவர் நடித்த படங்களும் அடுத்தடுத்து ஹிட் ஆனதால் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்தார் கார்த்தி.
தற்போது நடிகர் கார்த்தி கைவசம் பொன்னியின் செல்வன், விருமன், சர்தார் ஆகிய படங்கள் உள்ளன. இதில் விருமன் படம் வருகிற ஆகஸ்ட் 11-ந் தேதியும், பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30-ந் தேதி, சர்தார் படம் அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகைக்கும் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர தற்போது ராஜூ முருகன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் கார்த்தி.
இதையும் படியுங்கள்... நான் இருக்கும்போது இன்னொருத்தி கேக்குதா... நடிகையுடன் காரில் கிஸ் அடித்தபடி சென்ற நடிகரை புரட்டி எடுத்த மனைவி
இந்நிலையில், நடிகர் கார்த்தி தான் காதலிக்காதது ஏன் என்பது குறித்து பேட்டி ஒன்றில் மனம்விட்டு பேசியுள்ளார். அதன்படி தனது அண்ணன் சூர்யா, ஜோதிகாவை காதலித்து கல்யாணம் பண்ணியதால், லவ் எதுவும் பண்ணிடாத டானு அம்மா சொல்லிட்டே இருப்பாங்க. அதனாலயே காதல் என்பது என் வாழ்க்கையில் இல்லாமலே போய்விட்டது.
சரி வீட்டில் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்யலாம் என்றால், யாரும் பொண்ணு தரல. 6 வருஷம் தேடியும் பொண்ணு கிடைக்கல. ஒரு கட்டத்துல அம்மாவே என்கிட்ட வந்து யாரையாவது லவ் பண்ணா சொல்லு.. கல்யாணம் பண்னி வைக்கிறேன்னு சொன்னாங்க. அதை இப்போ சொன்னா எப்படினு சொல்லி வீட்டில் பார்த்த பெண்ணையே கல்யாணம் பண்ணிக்கொண்டதாக கூறியுள்ளார் கார்த்தி.
இதையும் படியுங்கள்... 51 வயதிலும்... 20 வயது ஹீரோயின் போல் தங்க நிற உடையில் தகதகவென மின்னி யங் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் குஷ்பு!