நான் இருக்கும்போது இன்னொருத்தி கேக்குதா... நடிகையுடன் காரில் கிஸ் அடித்தபடி சென்ற நடிகரை புரட்டி எடுத்த மனைவி
Prakruti Mishra : ஒடிசாவை சேர்ந்த நடிகர் ஒருவர் சக நடிகையுடன் காரில் கிஸ் அடித்தபடி சென்றதை பார்த்த மனைவி, அவர்கள் இருவரையும் புரட்டி எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிசாவை சேர்ந்தவர் பாபுஷான் மோஹண்டி, இவர் ஒடியா மொழி படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவருக்கு திரிபாதி சத்பாதி என்கிற துணை நடிகையை திருமணம் ஆகிவிட்டது. இருந்தபோதிலும் இவர் தன்னுடன் நடித்த சக நடிகையான பிரக்ருதி மிஷ்ரா என்கிற நடிகையுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்ததாக நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்தது.
இதுகுறித்து சந்தேகம் எழுந்த நிலையில், நடிகர் பாபுஷான் மோஹண்டின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அவரை பாலோ செய்துள்ளார். அப்போது நடிகை பிரக்ருதி மிஷ்ரா உடன் காரில் கிஸ் அடித்தபடி தனது கணவர் செல்வதை பார்த்து ஆத்திரமடைந்த திரிபாதி, அவர்கள் சென்ற காரை வழிமறித்து நடு ரோட்டில் நடிகை பிரக்ருதி மிஷ்ராவின் முடியை பிடித்து இழுத்து சண்டையிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்...வேகமாக செயல்படும் தயாரிப்பாளர்கள் தமிழ் திரையுலகிற்கு தேவை! பிரபுதேவா வைத்த கோரிக்கை!
இதையடுத்து நடிகை பிரக்ருதி மிஷ்ரா, அந்த காரில் இருந்து இறங்கி ஆட்டோவில் ஏறி தப்பிச் சென்றார். அதன்பின்னர் காரில் இருந்த தனது கணவரின் சட்டையை பிடித்து இழுத்து சண்டையிட்ட திரிபாதி சத்பாதி, ‘நான் இருக்கும்போது உனக்கு இன்னொருத்தி கேக்குதா’ என கேட்டு வெளுத்து வாங்கி உள்ளார். இதனை அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
இதனிடையே நடிகை பிரக்ருதி மிஷ்ராவின் தாயார் திரிபாதி சத்பாதி மீது புவனேஸ்வர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பாபுஷானின் மனைவி சில அடியாட்களுடன் வந்து தனது மகளை தாக்கியதாக அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து திரிபாதி சத்பாதி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்...பட விழாவுக்கு வர அவசரத்துல... துப்பட்டவை எடுத்து சுத்திகிட்டு வந்துட்டாங்களோ? ஷாக் கொடுத்த அனன்யா பாண்டே!