MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Trisha : சிம்பிள் லுக்... செம அழகு! த்ரிஷாவின் கோல்டன் சேலைக்கு பின்னணியில் இப்படி ஒரு சென்டிமென்டா?

Trisha : சிம்பிள் லுக்... செம அழகு! த்ரிஷாவின் கோல்டன் சேலைக்கு பின்னணியில் இப்படி ஒரு சென்டிமென்டா?

Trisha Saree : சுதந்திர தின விழாவுக்கு த்ரிஷா கட் வந்த புடவை அவங்க அம்மாவுடையதாம். இந்த தகவலை அவரே சோஷியல் மீடியாவில் சொல்லியிருக்கிறார். அந்த புடவையில் எடுத்த போட்டோஷூட் வைரலாகி வருகிறது.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 17 2026, 07:12 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
சுதந்திர தின விழாவில் த்ரிஷா
Image Credit : Trisha Krishnan Instagram

சுதந்திர தின விழாவில் த்ரிஷா

தென்னிந்திய சினிமாவில் நீண்ட காலமாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. படங்கள் மட்டுமின்றி, தன்னுடைய இயல்பான அழகு மற்றும் நேர்த்தியான ஃபேஷன் தேர்வுகளாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் அவர் அணிந்திருந்த ஒரு புடவை லுக் இணையத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, அந்தப் புடவைக்கு பின்னால் இருக்கும் சென்டிமென்ட் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.

தமிழ்நாடு அரசு சார்பில் சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் த்ரிஷா கலந்துகொண்டார். மெரினா கடற்கரையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினர்களுடன் அவர் பங்கேற்றார். விழாவில் த்ரிஷாவுக்கு சிறப்பு விஐபி இருக்கையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

விழாவுக்கு அவர் அணிந்து வந்திருந்த பாரம்பரிய உடைதான் அங்கு பலரது கவனத்தையும் ஈர்த்தது. வழக்கமான மாடர்ன் லுக்கைத் தாண்டி, எளிமையான மற்றும் கம்பீரமான தோற்றத்தில் அவர் காட்சியளித்தார்.

Trisha : சுதந்திர தின விழாவில் த்ரிஷா... சல்யூட் அடித்த முதல்வர் விஜய் - வைரலாகும் போட்டோஸ்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
தங்க நிற புடவையில் எலிகன்ட் லுக்
Image Credit : Trisha Krishnan Instagram

தங்க நிற புடவையில் எலிகன்ட் லுக்

சுதந்திர தின நிகழ்ச்சிக்காக த்ரிஷா தேர்வு செய்திருந்த தங்க நிற புடவை, அவரது தோற்றத்திற்கு கூடுதல் அழகு சேர்த்தது. குறைவான அலங்காரத்துடன் மிகவும் நேர்த்தியாக அவர் காட்சியளித்த விதம் ரசிகர்களிடையே பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

விழாவில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் அதன் பின்னர் அவர் பகிர்ந்த படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. த்ரிஷாவின் சிம்பிளான பாரம்பரிய லுக்கை ரசிகர்கள் பலரும் வெகுவாக ரசித்து வருகின்றனர்.

Related Articles

Related image1
Udhayanidhi-Trisha : உதயநிதி படத்தில் நடிக்க மறுத்தாரா திரிஷா? வைரலாகும் தகவலின் உண்மை என்ன?
Related image2
Trisha Kishnan: 44 வயதில் தான் வாழ்க்கை தொடங்குகிறது.! தனுஷ் பிறந்தநாளில் த்ரிஷா போட்ட பதிவு.!
36
இந்தப் புடவைக்கு பின்னால் இப்படி ஒரு சென்டிமென்ட்டா?
Image Credit : Trisha Krishnan Instagram

இந்தப் புடவைக்கு பின்னால் இப்படி ஒரு சென்டிமென்ட்டா?

த்ரிஷாவின் இந்த லுக்கில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த விஷயம், அவர் அணிந்திருந்த புடவையின் பின்னணிதான். சுதந்திர தின விழாவில் தான் அணிந்திருந்தது தனது அம்மாவின் புடவை என்பதை த்ரிஷா சமூக வலைதளப் பதிவின் மூலம் தெரிவித்திருந்தார்.

அம்மாவுடன் தொடர்புடைய ஆடை என்பதால், இந்தப் புடவை தனக்கு மிகவும் ஸ்பெஷலானது என்பதை த்ரிஷா வெளிப்படுத்தியுள்ளார். அதே புடவையில் அவர் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

46
வைரலாகும் போட்டோஷூட்
Image Credit : Trisha Krishnan Instagram

வைரலாகும் போட்டோஷூட்

தங்க நிற புடவையில் பாரம்பரிய தோற்றத்தில் த்ரிஷா இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக, அம்மாவின் புடவை என்ற தகவல் வெளியான பிறகு, இந்தப் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் கூடுதல் வரவேற்பு கிடைத்துள்ளது.

ஃபேஷனில் எவ்வளவு டிரெண்டியாக இருந்தாலும், சென்டிமென்ட் கொண்ட விஷயங்களை த்ரிஷா இன்னும் பாதுகாத்து வருகிறார் என்பதை இந்த லுக் காட்டுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

56
அடுத்தடுத்து வரும் பிரம்மாண்ட படங்கள்
Image Credit : Trisha Krishnan Instagram

அடுத்தடுத்து வரும் பிரம்மாண்ட படங்கள்

சினிமாவைப் பொறுத்தவரை த்ரிஷாவுக்கு தற்போது அடுத்தடுத்து முக்கியமான படங்கள் கைவசம் உள்ளன. சூர்யா நடிப்பில் வெளியான ‘கருப்பு’ படத்தில் அவர் நடித்திருந்தார். ஆர்.ஜே. பாலாஜி இயக்கிய இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது.

இதனைத் தொடர்ந்து, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி நடிக்கும் ‘விஸ்வம்பரா’ படத்திலும் த்ரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். வசிஷ்டா இயக்கும் இந்த சோஷியோ-ஃபேண்டஸி திரைப்படம் மீது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

மோகன்லாலுடன் மீண்டும் இணையும் த்ரிஷா

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால் நடிக்கும் ‘ராம்’ திரைப்படத்திலும் த்ரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். ‘த்ரிஷ்யம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜீத்து ஜோசப் இந்தப் படத்தை இயக்குகிறார்.

சம்யுக்தா மற்றும் இந்திரஜித் சுகுமாரன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர். இப்படி தொடர்ந்து பெரிய அளவிலான படங்களில் பிஸியாக இருக்கும் த்ரிஷா, மறுபுறம் தனது அம்மாவின் புடவையில் தோன்றிய எளிமையான லுக்கால் ரசிகர்களின் மனதையும் கவர்ந்துள்ளார். தற்போது அந்தப் புகைப்படங்கள்தான் சோஷியல் மீடியாவில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளன.

66
வைரலாகும் சிம்பிள் லுக்!
Image Credit : Trisha Krishnan Instagram

வைரலாகும் சிம்பிள் லுக்!

இதுமட்டுமல்லாமல், மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் நடிக்கும் 'ராம்' படத்திலும் த்ரிஷா ஹீரோயினாக நடிக்கிறார். 'த்ரிஷ்யம்' புகழ் ஜீத்து ஜோசப் இயக்கும் இந்தப் படத்தில் சம்யுக்தா மற்றும் இந்திரஜித் சுகுமாரன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மொத்தத்தில், அம்மாவின் புடவையில் த்ரிஷா தோன்றிய இந்த சிம்பிள் லுக், சோஷியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
திரிஷா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Travel Movies : வீட்டிலிருந்தே உலகத்தை சுற்றிப் பார்க்க வைக்கும் 5 படங்கள்!
Recommended image2
Korean Movies : மனதை லேசாக்கும் 7 சூப்பர் ஹிட் கொரியன் திரைப்படங்கள்!
Recommended image3
OTT வேண்டாம்... மிரள வைக்கும் ட்விஸ்ட்களுடன் கூடிய இந்த தமிழ் வெப் சீரிஸை யூடியூப்பில் இலவசமா பார்க்கலாம்
Related Stories
Recommended image1
Udhayanidhi-Trisha : உதயநிதி படத்தில் நடிக்க மறுத்தாரா திரிஷா? வைரலாகும் தகவலின் உண்மை என்ன?
Recommended image2
Trisha Kishnan: 44 வயதில் தான் வாழ்க்கை தொடங்குகிறது.! தனுஷ் பிறந்தநாளில் த்ரிஷா போட்ட பதிவு.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved