MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • குடும்பத்தை களைத்து.. ஜெயம் ரவியை ஆட்டி வைக்கும் கெனிஷா பிரான்சிஸ் யார்? அதிரவைக்கும் பின்னணி!

குடும்பத்தை களைத்து.. ஜெயம் ரவியை ஆட்டி வைக்கும் கெனிஷா பிரான்சிஸ் யார்? அதிரவைக்கும் பின்னணி!

நடிகர் ஜெயம் ரவி விவாகரத்து சர்ச்சையில் அடிப்படும் பாடகி கெனிஷா பிரான்சிஸ் யார் என்றும்? அவருடைய பின்னணி என்ன என்பது பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம். 

4 Min read
manimegalai a
Published : Sep 18 2024, 04:41 PM IST| Updated : Sep 18 2024, 07:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Jayam Ravi Aarthi Marriage Photos

Jayam Ravi Aarthi Marriage Photos

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் ஜெயம் ரவி, கடந்த 2009-ஆம் ஆண்டு தன்னுடைய காதலியான, தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார். ஆர்த்தி மிகவும் வசதியான வீட்டுப் பெண் என்பதால் ஆரம்பத்தில் ஜெயம் ரவியின் பெற்றோர்  இவருடைய திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க தயங்கிய போது, ஜெயம் ரவி வாழ்ந்தால் ஆர்த்தியுடன் தான் வாழ்வேன் எனக் கூறி தன்னுடைய கையில் கத்தியை வைத்து பெற்றோரை மிரட்டியதாக நக்கீரன் செய்தி தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னர் ஜெயம் ரவி தன்னுடைய திரைப்படத்திற்காக உடலை இளைத்து வந்த நேரத்தில், ஆர்த்தியை நினைத்து தான் உடல் இளைத்துக் கொண்டு போகிறார் என எண்ணிய ஜெயம் ரவியின் தந்தை மோகன் மற்றும் அவருடைய தாயார், திருமணத்திற்கு சம்மதிக்கிறோம் எனக் கூறி இருவருக்கும் மிகவும் பிரம்மாண்டமாக திருமணத்தை நடத்தி வைத்தனர். இவர்களுடைய திருமணத்தில் ரஜினிகாந்த், கமலஹாசன், உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். திருமணத்திற்கு பின்னர் தன்னுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்ந்த ஜெயம் ரவி பல வெற்றி படங்களில் நடித்தார். 

27
Jayam Ravi Aarthi Marriage Photos

Jayam Ravi Aarthi Marriage Photos

அதே போல் தன்னுடைய மருமகன் ஜெயம் ரவியை வைத்து சுஜாதா விஜயகுமார் தயாரித்த அடங்கமறு, டிக் டிக் டிக், சைரன், போன்ற திரைப்படங்கள் ஜெயம் ரவிக்கு வெற்றிப்படமாக அமைந்தது. திருமணம் ஆனதில் இருந்தே... ஜெயம் ரவி ஆர்த்தி இடையே எத்தனையோ பிரச்சனைகள் வந்தாலும், சுஜாதா விஜயகுமாரின் ஆதரவு எப்போதுமே ஜெயம் ரவிக்கு மட்டுமே தான் இருக்குமாம். காரணம் தன்னுடைய மகள் எல்லா விஷயத்திற்கும் அதிகம் கோபப்படுவார். நிதானத்தை இழந்து பேசுவார் என்றும்... ஆனால் ஜெயம் ரவி அப்படி கிடையாது. மிகவும் பொறுமையானவர். நிதானமானவர். என்பதையும்... சமீபத்தில் சுஜாதா கூறி இருந்தார்.

மேலும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை மிகவும் சந்தோஷமான தம்பதியாக இருந்த ஜெயம் ரவி- ஆர்த்தி இடையே அப்படி என்ன பிரச்சனை தான் நடந்தது? இவர்களின் திருமண உறவு விவாகரத்து வரை வர என்ன காரணம் என்கிற பல சந்தேகங்கள்... ஜெயம் ரவி தன்னுடைய விவாகரத்து அறிக்கையை வெளியிட்ட பின்னர் ரசிகர்களுக்கு தோன்றியது. 

உச்சகட்ட ரொமான்ஸ்.. என் படங்களை பார்க்க கூடாது! கண்டீஷன் போட்டு திருணம் செய்த கமல் - ரஜினி பட ஹீரோயின்!

37
Jayam Ravi and Aarti

Jayam Ravi and Aarti

ஜெயம் ரவி வெளியிட்ட தன்னுடைய விவாகரத்து அறிக்கையில், குடும்ப நலன் கருதி இந்த முடிவை எடுப்பதாக தெரிவித்திருந்தார். இந்த அறிக்கை வெளியான பின்னர், பலரும் ஆர்த்தி மீது தான் தவறு இருக்கிறது என சாடி பல்வேறு உண்மை இல்லாத தகவல்களை வெளியிட்டு வந்த நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆர்த்தி தன்னுடைய அறிக்கையை வெளியிட்டார். அதில் ஜெயம் ரவியின் இந்த முடிவு குடும்ப நலன் சார்ந்த எடுக்கப்பட்ட முடிவு அல்ல. தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவு என்பதை தெள்ளத் தெளிவாக கூறினார்.

அதேநேரம் தன் மீது குற்றம் சாட்டியும், தன் நடத்தையின் மீது களங்கம் கற்பிக்கும் வகையிலும் பொதுவெளியில் மறைமுகமாக நடத்தப்படும் தாக்குதல்களை மிகுந்த சிரமத்துடன் எதிர்கொள்ள வேண்டி உள்ளது என்றும், ஒரு தாயாக எனக்கு எப்போதும் என் குழந்தைகளின் நலனும் எதிர்காலமும் முதல் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என் குழந்தைகளை காயப்படுத்தும் என்பதை என்னால் அனுமதிக்க முடியாது என கூறிய ஆர்த்தி. ஜெயம் ரவி மீதான காதலையும் இந்த அறிக்கையில் வெளிப்படுத்தி இருந்தார்.
 

47
Kenishaa

Kenishaa

 என்னதான் ஜெயம் ரவி மீது கோபம் இருந்தாலும், தன்னுடைய கணவர் தனக்கு வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கும் ஆர்த்தி வாழ்க்கைக்குள் நுழைந்த அந்தப் பாடகி கெனிஷா பிரான்சிஸ் யார்? அவருக்கும் ஜெயம் ரவிக்கும் எப்படி தொடர்பு ஏற்பட்டது? என்பது குறித்த தகவலை பார்ப்போம்.

அதாவது ஜெயம் ரவி படப்பிடிப்பு இல்லாத நாட்களில் தன்னுடைய கல்லூரி நண்பர்களுடன் கோவாவுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அப்படி சென்ற ஒரு பயணத்தில் ஜெயம் ரவிக்கு அறிமுகமாகி இருக்கிறார் கெனிஷா பிரான்சிஸ். பெங்களூரைச் சேர்ந்த இவர், ஆரம்பத்தில் கோவா பகுதிகளில் உள்ள பப்புகளில் பாடி வந்தவர். பிறகு பல இண்டிபெண்டெண்ட் பாடல்களில் பாடி நடித்துள்ளார். தமிழில் நடிகர் ஜீவா தயாரித்த ஆல்பம் ஒன்றில் இவர் பாடியுள்ளார். இவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என கூறப்படும் நிலையில், இவருடைய கணவர் பற்றிய எந்த தகவலும் வெளியாகவில்லை.
 

57
Kenishaa And Jayam Ravi

Kenishaa And Jayam Ravi

கெனிஷா பிரான்சிஸ் குரலுக்கு ரசிகரான ஜெயம் ரவி, இந்த கெனிஷாவின் நண்பராகவும் மாறி உள்ளார். இந்த நட்புதான் ஆர்த்தி - ஜெயம் ரவி இடையே உள்ள நெருக்கத்தை விளக்கி... ஜெயம் ரவியை திசை திருப்பி உள்ளது. இதன் காரணமாகவே ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இடையே சில மாதங்களாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது.  குறிப்பாக ஒவ்வொரு திருமண நாளையும் ஆர்த்தியுடன் கொண்டாடும் ஜெயம் ரவி, இந்த ஆண்டு தன்னுடைய மனைவியுடன் திருமண நாளை கூட கொண்டாடாமல் ஷூட்டிங் இருப்பதாக கூறி கோவாவுக்கு சென்றுள்ளார். இந்த தகவல் எப்படியோ ஆர்த்தி காதுக்கு வர ஆர்த்தி உடனடியாக கோவா சென்று ஜெயம் ரவி எப்போதும் தாங்கும் ஹோட்டலை சோதனை இட்டபோது அவர் அங்கு இல்லாதது தெரியவந்துள்ளது.

சாவித்ரியோட நிலை கனகாவுக்கு வரவே கூடாது! கண்ணீர் விடாத குறையாக குமுறிய பிரபலம்!

67
Car Challan Date Details

Car Challan Date Details

அதேபோல் ஜூன் 24ஆம் தேதி ஜெயம் ரவி பெயரில் வாங்கிய சொகுசு கார் ஒன்றில், கோவாவின் கலாம் கட் பகுதியில், உள்ளே இருப்பது வெளியே தெரியாமல் இருக்க ஒட்டப்படும் தடை செய்யப்பட்ட அதிக அடர்த்தி கொண்ட கருப்பு நிறத்தில் கிளாஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதற்காக கோவா போலீசார் ஜெயம் ரவி காருக்கு அபராதம் விதித்துள்ளனர்.  பின்னர் ஜூலை 14ஆம் தேதி, ஜெயம் ரவியின் காரை அதிவேகமாக கெனிஷா பிரான்சிஸ் ஓட்டியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த நகல்கள் தற்போது வெளியாகி இந்த தகவலை உறுதி செய்துள்ளது. அடுத்தடுத்து ஜெயம் ரவி கெனிஷா பிரான்சிஸ் உறவு மனதுக்கு நெருடலை ஏற்படுத்தவே, ஜெயம் ரவியுடன் எடுத்து கொண்ட சில புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கி தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்தார்.

77
Aarti And Jayam Ravi Sons

Aarti And Jayam Ravi Sons

அதே நேரம், தங்களுக்குள் இருக்கும் பிரச்சனை குறித்து மனம் விட்டு பேச ஆர்த்தி முயற்சி செய்த போதிலும்... ஜெயம் ரவி அவரை பார்க்காமல் தவிர்த்துள்ளார். இதற்க்கு காரணம் கெனிஷா பிரான்சிஸ் தான் என்றும் கூறப்படுகிறது. ஷூட்டிங் சென்றுள்ள அப்பா பிறந்தநாளுக்கு வந்து விடுவார் என ஆசையாக ஜெயம் ரவி மகன்கள் காத்திருந்த நிலையில், அதற்க்கு முன்பாகவே இவரது விவாகரத்து அறிக்கை வெளியாகி பூகம்பத்தை ஏற்படுத்தியது. தற்போது மீண்டும் ஜெயம் ரவி - ஆர்த்தியை சேர்த்து வைக்க ஜெயம் ரவியின் தந்தை மற்றும் அண்ணன் முயற்சி எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

ஆனால் கெனிஷா பிரான்சிஸ் கட்டுப்பாட்டில் ஜெயம் ரவி  இருப்பதால் குடும்பத்தினரை கூட சந்தித்து பேச மறுப்பதாகவும், போன் செய்தால் கூட அதை எடுப்பதில்லை என கூறப்படுகிறது. கெனிஷா பிரான்சிஸ் பாடகி என்பதைத் தாண்டி தன்னை ஒரு ஆன்மீக மனவள சிகிச்சையாளர் என கூறிக்கொண்டு வலம் வருகிறார் என கூறப்படுகிறது. ஜெயம் ரவியை தன்னுடைய வலையில் வீழ்த்தியுள்ள கெனிஷாவிடம் இருந்து மீண்டும், ஜெயம் ரவி மீண்டும் ஆர்த்தியுடன் சேர வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

விக்னேஷ் சிவனுக்கு பிறந்தநாள் : நள்ளிரவில் நச்சுனு ஒரு கிஃப்ட் கொடுத்த நயன்தாரா - விக்கி செம ஹாப்பி!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ஜெயம் ரவி

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved