MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • போயஸ் கார்டன் ஆடம்பர பங்களா முதல் பல சொகுசு கார்கள் வரை.. நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

போயஸ் கார்டன் ஆடம்பர பங்களா முதல் பல சொகுசு கார்கள் வரை.. நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

ஒரு சில தோல்வி படங்களை கொடுத்தாலும் பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், போன்ற படங்களின் மூலம் தனது அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தினார் தனுஷ்.

3 Min read
Ramya s
Published : Sep 29 2023, 03:33 PM IST| Updated : Sep 29 2023, 03:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Dhanush

Dhanush

தமிழ் சினிமாவின் பன்முக திறமை கொண்ட நடிகர்களில் தனுஷும் ஒருவர். தனது தந்தை இயக்கிய துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான தனுஷ்,காதல் கொண்டேன், திருடா திருடா என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்தாலும், தனது ஒல்லியான தோற்றத்தால் கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட தனுஷ் தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஒருவராக மாறி உள்ளார். இடையில் ஒரு சில தோல்வி படங்களை கொடுத்தாலும் பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், போன்ற படங்களின் மூலம் தனது அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தினார் தனுஷ்.

29

இதை தொடர்ந்து அவருக்கு பாலிவுட்டில் வாய்ப்பு கிடைத்தது. தனுஷ் நடிப்பில் வெளியான ராஞ்சனா என்ற ஹிந்தி படம் நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் வெளியான ஷமிதாப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் 2021-ம் ஆண்டு வெளியான அத்ரங்கி ரே படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

39
Dhanush 50

Dhanush 50

தொடர்ந்து அவருக்கு ஹாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தி கிரே மேன் (2022) என்ற ஹாலிவுட் படத்தில் தனுஷ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். ஆடுகளம், அசுரன் உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை தனுஷ் வென்றுள்ளார். சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம், வாத்தி போன்ற படங்கள் விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. 

விஜய், அஜித்தெல்லாம் லிஸ்ட்லயே இல்ல பாஸ்! டாப் 10 பணக்கார இந்திய நடிகர்களும்.. அவர்களின் சொத்து மதிப்பும்..!
 

49

பொல்லாதவன் (2007), யாரடி நீ மோகினி (2008), ஆடுகளம் (2010), மரியான் (2013), வேலையில்லா பட்டதாரி (2014), அனேகன் (2015), மாரி (2015), கொடி (2016), வேலையில்லா பட்டதாரி 2 ( 2017), மாரி 2 (2018), வடசென்னை (2018), அசுரன் (2019), திருச்சிற்றம்பலம் (2022), மற்றும் வாத்தி (2023) ஆகியவை தனுஷுக்கு பெரும் அங்கீகாரத்தை அளித்தன.

59

நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர் மற்றும் பின்னணி பாடகர் என பன்முகத் திறமை கொண்ட நடிகர் தனுஷின் சொத்துமதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக, தனுஷின் சொத்து மதிப்பு ஆண்டுக்கு ஆண்டு வேகமாக அதிகரித்து வருகிறது. ஃபோர்ப்ஸ் இந்தியா பிரபலங்கள் 100 பட்டியலில் தனுஷ் 6 முறை இடம் பெற்றுள்ளார்.

69
Dhanush

Dhanush

தனுஷின் நிகர மதிப்பு சுமார் 160 கோடி. ஃபோர்ப்ஸ் வெளியிட்ட தரவுகளின்படி, 2019 ஆம் ஆண்டுக்கான மாரி நடிகரின் ஆண்டு வருமானம் 31.75 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. நடிகர் தற்போது ரூ.15 கோடி சம்பளம் பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனுஷின் தயாரிப்பு நிறுவனம் Wunderbar Films இதுவரை 19 படங்களை தயாரித்துள்ளது. மேலும் இந்த படங்களிலிருந்து தனுஷ் பெரும் லாபத்தைப் பெற்றார்.

79

தனுஷுக்கு சென்னை போயஸ் கார்டனில் சொகுசு வீடு உள்ளது. இந்த ஆடம்பர வீட்டின் மதிப்பு ரூ.25 கோடி ஆகும். மேலும் அவருக்கு பல இடங்களில் வீடுகள் இடங்கள் உள்ளன. விலை உயர்ந்த கார்களை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவராகவும் தனுஷ் உள்ளார். 

ஐஸ்வர்யா ராய் முதல் நயன்தாரா வரை.. டாப் 10 பணக்கார இந்திய நடிகைகள்.. இவர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
 

 

89

ரூ. 45 லட்சம் மதிப்புள்ள  Jaguar XE, ரூ. 75 லட்சம் மதிப்புள்ள Ford Mustang, ரூ. 1.65 கோடி விலையுள்ள Audi A8 உட்பட பல சொகுசு கார்களை அவர் வைத்திருக்கிறார். இவை தவிர ரூ. 3.40 கோடி) மதிப்புள்ள Bentley Continental Flying Spur மற்றும் ரூ. 7 கோடி மதிப்புள்ள Rolls Royce Ghost ,  ரூ.1.50 கோடி மதிப்புள்ள Range Rover Sport HSE' ரூ. 1.42 கோடி மதிப்புள்ள Mercedes-Benz S-Class S350 ஆகிய ஆடம்ப கார்களையும் தனுஷ் வைத்திருக்கிறார்.

99

நடிகர் தனுஷ், சூப்பர்ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்று இரு மகன்கள் உள்ள நிலையில், 18 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
தனுஷ்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved