கேப்டன் மில்லர் படத்துக்காக லுக்கை மாற்றிய தனுஷ்... வெறித்தனமா இருக்கே என சிலாகிக்கும் ரசிகர்கள்
Dhanush : அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாக உள்ள கேப்டன் மில்லர் படத்துக்காக நடிகர் தனுஷ் முற்றிலும் வித்தியாசமான புது லுக்கிற்கு மாறி உள்ளார்.
நடிகர் தனுஷ் உலக அளவில் பேமஸ் ஆன நடிகராக மாறிவிட்டார். இதற்கு காரணம் அவர் கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை பல்வேறு திரையுலகில் பணியாற்றியது தான். தற்போது கூட இவர் தி கிரே மேன் என்கிற ஹாலிவுட் படமொன்றில் நடித்திருக்கிறார். அவெஞ்சர்ஸ் படத்தை இயக்கிய ரூஸோ பிரதர்ஸ் தான் இப்படத்தையும் இயக்கி உள்ளனர்.
இதில் அவிக் சேன் என்கிற மாஸான கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார். தி கிரே மேன் திரைப்படம் வருகிற ஜூலை 22-ந் தேதி பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது. இதனால் இப்படத்தின் புரமோஷன் பணிகள் வேகமெடுத்துள்ளன. சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற கிரே மேன் பட நிகழ்வில் கலந்துகொண்ட தனுஷ், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இதையும் படியுங்கள்... மது பார்ட்டியில் மனைவி - மகளுடன் கலந்து கொண்டாரா அஜித்? விமர்சனத்திற்கு ஆளான புகைப்படம்..!
இதற்கு முக்கிய காரணம் அவரது ஹேர்ஸ்டைல் தான். நீளமான தலைமுடி மற்றும் தாடியுடன் பார்ப்பதற்கு செம்ம மாஸாக இருந்த தனுஷின் இந்த தோற்றம் அவர் அடுத்ததாக நடிக்க உள்ள கேப்டன் மில்லர் படத்துக்கான கெட் அப் என கூறப்படுகிறது. லுக்கே மிரட்டலாக இருப்பதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
கேப்டன் மில்லர் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே சாணிக் காயிதம் மற்றும் ராக்கி ஆகிய படங்களை இயக்கியவர் ஆவார். இப்படத்திற்கான படப்பிடிப்பும் விரைவில் தொடங்கும் என கூறப்படுகிறது. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
இதையும் படியுங்கள்... சூர்யா - சாய் பல்லவி கூட்டணியில் வெளியாகும் ‘கார்கி’ படத்தின் சர்ப்ரைஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு