Bobby Simha: 'இந்தியன் 2' படப்பிடிப்பு தளத்தில் பிறந்தநாள் கொண்டாடிய பாபி சிம்ஹா..! வெளியான போட்டோஸ்..!
பிரபல நடிகர் பாபி சிம்ஹா இன்று தன்னுடைய பிறந்தநாளை... 'இந்தியன் 2' படப்பிடிப்பில் கொண்டாடியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தேசிய விருது நடிகர், பாபி சிம்ஹா இன்று தன்னுடைய 38 -ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், காலை முதலே ரசிகர்கள் பலர் இவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
நடிகர் பாபி சிம்ஹா, தமிழில்.. 'மாய கண்ணாடி' என்கிற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர். இதை தொடர்ந்து 'காதலில் சொதப்புவது எப்படி', 'பீசா', 'நான் ராஜாவாக போகிறேன்' போன்ற படங்களில் அடுத்தடுத்து நடித்து, ரசிகர்கள் மனதில் பதிந்தார்.
35 வருடத்திற்கு பின் மீண்டும் இணையும் கமல்ஹாசன் - மணிரத்தினம்..! அதிகார பூர்வ அறிவிப்பு வெளியானது..!
இவருடைய திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்றால் அது, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான 'ஜிகிர்தண்டா' திரைப்படம் தான். இந்த படத்தில் அசால்ட் சேதுவாக இவர் செய்த அளப்பறைக்கு, தேசிய விருதே கிடைத்தது.
இதை தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்புகளும் இவருக்கு கிடைத்தது. மேலும் தற்போது வில்லன், குணச்சித்திர வேடம் என ஆல்ரவுண்டராக நடித்து வருகிறார்.
தமிழை தவிர, தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து... ரசிகர்களால் நன்கு அறியப்பட்ட இவர், தற்போது.. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும், 'இந்தியன் 2' படத்தில் வில்லனாக நடித்து வருவதாக கூறப்படுகிறது.
இன்று தன்னுடைய பிறந்தநாளை பாபி சிம்ஹா இந்தியன் 2 படப்பிடிப்பில் இயக்குனர் ஷங்கர் மற்றும் படக்குழுவினருடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.