35 வருடத்திற்கு பின் மீண்டும் இணையும் கமல்ஹாசன் - மணிரத்தினம்..! அதிகார பூர்வ அறிவிப்பு வெளியானது..!

35 வருடங்களுக்குப் பின், உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இணைய உள்ள படம் குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.
 

Kamal Haasan and  Mani Ratnam will reunite after 35 years

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடிப்பில் கடந்த 1987 ஆம் ஆண்டு வெளியான 'நாயகன்' திரைப்படம் தற்போது வரை அனைத்து ரசிகர்களாலும் ரசிக்கப்பட்டு, வரும் திரைப்படங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த திரைப்படம் வெளியாகி 35 ஆண்டுகள் ஆகும் நிலையில், மீண்டும் இந்த இரு ஜாம்பவான்களும் இணைந்து பணியாற்ற உள்ளனர். இது குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

Kamal Haasan and  Mani Ratnam will reunite after 35 years

Varisu பல பாடல்களை அட்ட காப்பி அடித்து... ஒரே பாடலாய் உருவான 'ரஞ்சிதமே'..! வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

கமல்ஹாசனின் 234 வது திரைப்படமாக உருவாகும் இந்த படம் குறித்த, பல்வேறு தகவல்கள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளார். இந்த திரைப்படம் 2024 ஆம் ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மிக பிரமாண்டமாக உருவாகும் இந்த படத்தை, ரெட் ஜெயின் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின், மெட்ராஸ் டாக்கீஸ், மற்றும்  ராஜ் கமல் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Kamal Haasan and  Mani Ratnam will reunite after 35 years

Alia Bhatt: ஆலியா பட் - ரன்பீர் கபூர் ஜோடிக்கு குழந்தை பிறந்தது..! குவியும் வாழ்த்து..!

ஏற்கனவே வெளியான தகவலில், கமல்ஹாசன் அஜித்தின் 'துணிவு' பட இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக சில தகவல்கள் வெளியான நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக கமல்ஹாசன் - மணிரத்தினம் காம்போ இணைந்து பணியாற்ற உள்ள தகவல் வெளியாகியுள்ளது. பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாக உள்ள படம் குறித்த தகவல், படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரிக்க செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios