Varisu பல பாடல்களை அட்ட காப்பி அடித்து... ஒரே பாடலாய் உருவான 'ரஞ்சிதமே'..! வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

தளபதி விஜய் நடித்துள்ள 'வாரிசு' படத்தில் இருந்து, நேற்று வெளியான 'ரஞ்சிதமே' பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவரும் போதிலும், பல்வேறு காப்பிகேட் ட்ரோல்களில் சிக்கியுள்ளது.
 

thalapathy vijay starring varisu movie ranjithamea song copy cat for many songs

தளபதி விஜய், பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர்  வம்சி இயக்கத்தில் முதல் முறையாக நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'. ரசிகர்களின் பல்வேறு எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பிரபு, சரத்குமார், குஷ்பூ போன்ற பிரபலங்களும் நடித்துள்ளனர்.

பொங்கல் திருவிழாவை முன்னிட்டு 'வாரிசு' திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், தற்போது படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து விட்டதால்... படக்குழு போஸ்ட் புரோடக்ஷன் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது. மேலும் படத்தின் வியாபாரமும், ரிலீசுக்கு முன்பே நல்ல லாபத்தை கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. குடும்ப சென்டிமென்ட், காதல், காமெடி என ஜனரஞ்சகமான படமாக இந்த படம் உருவாகியுள்ளதாக இயக்குனர் வம்சி ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் நேற்று மாலை வெளியானது.

திரையுலகில் அதிர்ச்சி! நடிக்க வாய்ப்பு கேட்டு வந்த மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து சீரழித்த தயாரிப்பாளர்!

thalapathy vijay starring varisu movie ranjithamea song copy cat for many songs

தமன் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை தளபதி விஜய் பாடியுள்ளார், இவருடன் சேர்ந்து மானஸ்வியும் இந்த பாடலை பாடி இருந்தார். 'ரஞ்சிதமே' பாடல் நேற்று வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், பல படங்களின் மெட்டை காப்பி அடித்தே இந்த ஒரு பாடலை தமன் உருவாகியுள்ளதாக பல்வேறு விமர்சனங்களும் எழுந்து வருகிறது.

3 மத முறையில் வழிபாடு செய்து... 11 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த நடிகர் விஷால்!

 

மகாலட்சுமி செய்த செயல்..? போட்டோ போட்டு மானத்தை வாங்கிய கணவர் ரவீந்தர்..!

விஷால் படத்தில் இடம்பெற்ற ம்யூசிக்கை கூட விட்டுவைக்கலாயா பாஸ் நீங்க..? அதே போல் மானஸ்வி பாடும்  'காட்டு மல்லி கட்டி வச்சா... கலகலப்பா பொட்டு வச்சா...' சங்கதி பருத்தி வீரன்படத்தில் இடம்பெற்ற நெத்தியில பொட்டு வச்சி நெய்வரான சேலை கட்டி என்கிற பாடலுடன் ஒப்பிட்டும் , முட்ட முட்ட கண்ணழகா... என்ற பாடலுடன் ஒப்பிட்டும் கலாய்த்து வருகிறார்கள். இது குறித்த சில வீடியோக்களும்... ட்ரோல்களுடம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios