திரையுலகில் அதிர்ச்சி! நடிக்க வாய்ப்பு கேட்டு வந்த மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து சீரழித்த தயாரிப்பாளர்!
பார்த்திபன் என்கிற நபர் தன்னை தயாரிப்பாளர் என கூறி கொண்டு, நடிக்க வாய்ப்பு கேட்டு வந்த கல்லூரி மாணவியை சீரழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையை சேர்ந்த பெண் ஒருவர், தயாரிப்பாளர் தன்னை ஏமாற்றி சீரழித்து விட்டதாக, பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, "கடந்த 2019 ஆம் ஆண்டு நான், கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது.. சினிமா வாய்ப்பு குறித்து சமூக வலைதளத்தில் வெளியான தகவலை பார்த்து, பின் அதில் குறிப்பிடப்பட்டிருந்த செல்போன் எண்ணுக்கு போன் செய்து பேசினேன். அதில் கரூர் நல்லிபாளையத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் தான் சினிமா ஒரு சினிமா பட தயாரிப்பாளர் என்றும் தற்போது கதாநாயகி தேர்வு நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
பின்னர் கதாநாயகி தேர்வுக்காக தன்னை பொள்ளாச்சியில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்தார். நானும் நடிகையாக வேண்டும் என்கிற ஆசையில் இருந்ததால் அவர் கூறிய இடத்திற்கு சென்றேன். அங்கு இருந்த பார்த்திபன் தன்னிடம் நல்ல விதமாக பேசி, பின்னர் குளிர்பானம் கொடுத்தார். அதில் மயக்க மருந்து கலந்திருப்பது தெரியாமல் அதை பருகியதும் நான் மயங்கி விட்டேன். பின்னர் என்னை சீரழித்த அவர் எனக்கு மயக்கம் தெளிந்தவுடன் என்னை திருமணம் செய்து கொள்வதோடு, கதாநாயகியாக ஆக்குவதாகவும் கூறி சமாதானம் செய்தார்.
3 மத முறையில் வழிபாடு செய்து... 11 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த நடிகர் விஷால்!
இதையே காரணமாக கூறி பலமுறை என்னை தனியாக அழைத்து தவறாக நடந்து கொண்டார். இதில் நான் கர்ப்பமானேன். எனினும் குழந்தை பிறந்து விட்டால் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க முடியாது எனக் கூறி அந்த குழந்தையையும் கலைக்க செய்தார். தொடர்ந்து என்னை ஏமாற்றியதை அறிந்த நான், தற்போது காவல் நிலையத்தை நாடி உள்ளதாகவும் எனவே அவருக்கு போலீசார் தக்க தண்டனை கொடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் அந்தப் பெண் கூறியுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் தன்னை தயாரிப்பாளர் என கூறிக்கொண்டு சுற்றிவரும் பார்த்திபன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக இருந்த அவரை தேடி வந்த நிலையில்... கோவை சரவணம்பட்டி கே புதூர் பாளையத்தில் அவர் வசித்து வந்த தகவலை அறிந்து, கையும் களவுமாக கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பார்த்திபன் கோவை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர் படுத்த பட்ட பின்னர், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மகாலட்சுமி செய்த செயல்..? போட்டோ போட்டு மானத்தை வாங்கிய கணவர் ரவீந்தர்..!
மேலும் இவர், பல பெண்களை ஏமாற்றியதாக கூறப்படுகிறது. பெண் ஒருவரை திருமணம் செய்து நகை மோசடியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. தன்னை சினிமா தயாரிப்பாளர் என கூறி .. பல பெண்களை ஏமாற்றிய பார்த்திபன் குறித்து வெளியாகியுள்ள தகவல் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Alia Bhatt: ஆலியா பட் - ரன்பீர் கபூர் ஜோடிக்கு குழந்தை பிறந்தது..! குவியும் வாழ்த்து..!