விஷால் செய்த துரோகம்..! மனசு நொந்து போய் அப்பாஸ் கூறிய அதிர்ச்சி தகவல்..!
தமிழ் சினிமாவில் சாக்குலேட் பாய்யாக அறியப்பட்ட நடிகர் அப்பாஸ் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், விஷால் செய்த துரோகம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
தமிழில் இயக்குனர் கதிர் இயக்கத்தில், கடந்த 1996-ம் ஆண்டு வெளியான 'காதல் தேசம்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் அப்பாஸ். இந்த படத்தில் வினீத் மற்றொரு நாயகனாக நடித்திருந்த நிலையில் இவர்கள் இருவருக்குமே இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருந்தாலும், இன்றைக்கும் கல்லூரி நிகழ்ச்சிகளில் முஸ்தப்பா பாடல் ஒலித்து கொண்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
முதல் படத்திலேயே அப்பாஸ் வெற்றி நாயகனாக மாறிய நிலையில், அடுத்தடுத்து காதல் படங்களை தேர்வு செய்து நடித்ததால்... பெண் ரசிகர்களின் மனம் கவர்ந்த சாக்லேட் பாய்யாக வலம் வந்தார். ஒரு காலத்தில் மிகவும் பிசியாக நடித்து கொண்டிருந்ததால், சில சூப்பர் ஹிட் பட வாய்ப்புகளையும் இழந்தார்.
நடிகர் பரத்தின் ட்வின்ஸ் மகன்களின் 5-ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்..! வைரலாகும் போட்டோஸ்..!
ஆரம்ப காலத்தில், இவர் தேர்வு செய்த நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், படையப்பா, ஹேராம், மின்னலே, ஆனந்தம், பம்மல் கே சம்மந்தம் என அடுத்தடுத்த படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற போதிலும், ஒரு கட்டத்தில் தொடர்ந்து தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் சறுக்கலை சந்திக்க துவங்கினார். ஹீரோ அந்தஸ்தில் இருந்து விலகி, 'திருட்டுப்பயலே' போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்திலும், வில்லனாகவும் நடித்தார்.
ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் போனதால்.. குடும்பத்துடன் நியூசிலாந்துக்கு சென்று செட்டில் ஆனார். உச்சத்தில் இருந்த பிரபலம் என்பதை வெளிக்காட்டி கொள்ளாமல் பெட்ரோல் பங்க், ஒர்க் ஷாப், போன்ற இடங்களில் வேலை செய்து, தன்னுடைய குடும்பத்தை காப்பாற்றினார். இவரின் முடிவுக்கு குடும்பத்தினரும் முழு ஒத்துழைப்பு கொடுத்து... கஷ்டகாலத்திலும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.
பல வருடங்களுக்கு பின்னர் மீண்டும் அப்பாஸ் பற்றிய செய்திகள் அதிகம் வெளியே வரவே... ட்ரெண்டிங் நடிகராக மாறியுள்ளார். விரைவில் சில படங்களிலும் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார் அப்பாஸ். மேலும் அவ்வப்போது சில பேட்டிகள் கொடுத்து வருகிறார். அப்படி கொடுத்த பேட்டி ஒன்றில், நடிகர் விஷால் தனக்கு செய்த துரோகம் குறித்து பேசியுள்ளார்.
செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடரின் போது, எனக்கும் விஷாலுக்கும் இடையே ஒரு சிறு கருத்து முரண்பாடு ஏற்பட்டது. ஆனால் அந்த விஷயத்தை நான் இப்போது மன்னித்து விட்டேன். அவரை நேரில் பார்த்தால் வணக்கம் சொல்வேன் பழையபடி நெருக்கமாக பழக மாட்டேன். செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் சீசன் 2 நிகழ்ச்சியின் போது... அவர் என் மீது அவதூறு பரப்பும் விதத்தில் சில பொய்யான தகவல்களை பரப்பினார். அதனால் தான் அதில் இருந்து நான் விலகிவிட்டேன் என அப்பாஸ் கூறியுள்ளார். அந்த சம்பவம் குறித்து மிகவும் கவலை பட்டதாகவும் தெரிவித்துள்ளார். பல வருடம் கழித்து விஷால் செய்த துரோகம் பற்றி அப்பாஸ் கூறியுள்ள இந்த தகவல் வைரலாகி வருகிறது.