பல வருடங்களுக்கு பின் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கும் அப்பாஸ்!
நடிகர் அப்பாஸ் திரையுலகில் இருந்து விலகி பல வருடங்கள் ஆகும் நிலையில், மீண்டும் தன்னுடைய ரீ-என்ட்ரியை உறுதி செய்துள்ளார். இவர் நடிக்க உள்ள வெப் தொடர் குறித்த அறிவிப்பு, தற்போது வெளியாகி உள்ளது.

'காதல் தேசம்' மூலம், ஹீரோவாக அறிமுகம்:
இயக்குனர் கதிர் இயக்கிய, 'காதல் தேசம்' திரைப்படத்தின் மூலம், ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் அப்பாஸ். இந்த படத்தில் மற்றொரு ஹீரோவாக வினீத் நடிக்க, பாலிவுட் நடிகை தபு ஹீரோயினாக நடித்திருந்தார். கல்லூரியில் படிக்கும் நண்பர்கள் இருவர், ஒரே பெண்ணை காதலிக்கும் நிலையில், யாரை அந்த பெண் காதலிக்கிறார்... யாருடன் ஜோடி சேர்வர் என் யூகிக்க முடியாத கதைக்களத்தில் இந்த படம் இருந்தது. இளவட்ட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெட்ரா இந்த படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்தார்:
அதே போல் இந்த படத்தில் ஏ ஆர் ரகுமானின் இசை மற்றும் பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றன. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, விஐபி, பிரியா ஓ பிரியா, பூச்சூடவா, இனி எல்லாம் சுகமே, ஜாலி, ஆசைத்தம்பி, பூவேலி என பல படங்களில் நடிக்க துவங்கினார்.
விடாமுயற்சி ஃப்ரீ புக்கிங் சேல்ஸ்; இந்திய அளவில் அஜித்தின் மாஸை உறுதி செய்த 8 சிட்டிஸ்!
தனி ஹீரோவாக ஜெயிக்க முடியாமல் போன அப்பாஸ்:
தமிழில் மட்டுமின்றி, கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, உள்ளிட்ட மொழிகளிலும் நடிகர் அப்பாஸ் சுமார் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அழகும் - திறமையும் இருந்தும், இவரால் ஒரு தனி ஹீரோவாக தமிழ் சினிமாவில் வெற்றி படங்களை கொடுக்க முடியாமல் போனது. மேலும் ரஜினிகாந்த் உடன் படையப்பா, கமலஹாசன் உடன் வசூல்ராஜா எம்பிபிஎஸ், ஹேராம், பம்மல் கே சம்மதம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
குடும்பத்தோடு வெளிநாட்டில் செட்டில் ஆன அப்பாஸ்
ஒரு கட்டத்தில், இவர் தமிழில் நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்ததால் இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. மன உளைச்சலுக்கு ஆளான பிரபாஸ், இனி சினிமாவே வேண்டாம் என முடிவு செய்து, தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளிநாட்டில் செட்டில் ஆனார்.
திரையுலகில் இருந்து, வெளிநாட்டிற்கு போனதால்... ஆரம்ப காலங்களில் தன்னுடைய குடும்பத்தை காப்பாற்ற, ஹோட்டல், பெட்ரோல் பங்க், வண்டிக்கு பஞ்சர் ஒட்டும் கடைகளில் கூட வேலை செய்ததாக தெரிவித்தார். சமீபத்தில் இதுகுறித்து, அப்பாஸ் கூற, ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
வைகை புயலுக்கு அடித்த ஜாக்பார்ட்; 'பொன்னியின் செல்வன்' நடிகர் படத்தில் இணைந்தார் வடிவேலு!
எக்ஸாம் வெப் தொடர் மூலம் ரீ-என்ட்ரி
இந்த நிலையில் மீண்டும், சுமார் 10 வருடங்களுக்கு பின் அப்பாஸ் ரீ-என்ட்ரி கொடுக்கும், வெப் தொடர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. புஷ்கர் காயத்ரி தயாரிப்பில், இயக்குனர் சற்குணம் இயக்கும் வெப் தொடரான எக்ஸாம் என பெயரிட்டுள்ள தொடரில் தான் அப்பாஸ் நடித்து வருகிறாராம். இவருடன் துஷாரா விஜயம் மற்றும் அதிதி பாலன் ஆகியோரோம் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.