விடாமுயற்சி ஃப்ரீ புக்கிங் சேல்ஸ்; இந்திய அளவில் அஜித்தின் மாஸை உறுதி செய்த 8 சிட்டிஸ்!
விடாமுயற்சி திரைப்படம், திரைக்கு வருவதற்கு முன்னதாகவே இந்தியா முழுவதும் 8 நகரங்களில் மாஸான வசூலை ஈட்டியுள்ளது. இது குறித்த விவரங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம்:
மகிழ் திருமேனி மற்றும் அஜித் குமார் காம்பினேஷனில் உருவாகி இருக்குற படம் தான் விடாமுயற்சி. துணிவு படம் வெளியாகி 2 ஆண்டுகளுக்கு பிறகு அதிக எதிர்பார்ப்புகளுடன் விடாமுயற்சி படம் பிப்ரவரி 4-ஆம் தேதி அன்று, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர உள்ளது. ஏற்கனவே பொங்கல் ரிலீசா இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. ஹாலிவுட் படமான 'பிரேக் டவுன் படத்தின்' ரீமேக்கா இப்படம் எடுக்கப்பட்டுள்ளதா கூறப்படும் நிலையில, ஆபிசில் ரைட்ஸ் வாங்குறதுல ஏற்பட்ட பிரச்சனை தான் இந்த படம் தாமதமா ரிலீஸ் ஆக காரணம் அப்படினு கூறப்பட்டுச்சு.
நாளை ரிலீசாகும் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம்:
ஒருவழியா இப்போ எல்லா பிரச்சனைகளும் முடிந்து, நாளை ரிலீஸ் ஆக உள்ள விடாமுயற்சி படத்தை ஆரவாரம் செய்து வரவேற்க ரசிகர்கள் கார்த்திருக்கின்றனர். கடந்த ஆண்டு அஜித்தின் எந்த படமும் திரைக்கு வராத நிலையில், 2025ஆம் ஆண்டு தொடக்கம் முதலே அஜித்தைப் பற்றிய பேச்சு தான் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
வைகை புயலுக்கு அடித்த ஜாக்பார்ட்; 'பொன்னியின் செல்வன்' நடிகர் படத்தில் இணைந்தார் வடிவேலு!
அஜித்துக்கு அடுத்தடுத்து கிடைக்கும் பெருமைகள்:
குறிப்பாக கார் ரேஸ், பத்ம பூஷன் விருது என்று பல சாதனைகளை நிகழ்த்திய அஜித்திற்கு இப்போது விடாமுயற்சி அடுத்த ஒரு சாதனையாக அமைந்துள்ளது. இப்படம் வரும் 6ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்தியா முழுவதும் ப்ரீ புக்கிங் தீவிரமாக நடந்து வருகிறது. அதன்படி இந்திய அளவில் மட்டும் விடாமுயற்சி ரூ.14.21 கோடி வசூல் ப்ரீ புக்கிங்கில் கலெக்ட் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
ப்ரீ புக்கிங் டாப் 8 சிட்டிஸ்:
இந்தியா முழுவதும் விடாமுயற்சி வெளியாகும் ஷோக்களின் எண்ணிக்கை மற்றும் அதிகம் வசூல் செய்த 8 நகரங்களை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை: ரூ.4.79 கோடி (899 ஷோ)
பெங்களூரு: ரூ. 2.01 கோடி (823 ஷோ)
கோயம்பத்தூர்: ரூ.1.29 கோடி (253 ஷோ)
மதுரை: ரூ.0.48 கோடி (172 ஷோ)
திருச்சி: ரூ.0.43 கோடி (82 ஷோ)
ஹைதராபாத்: ரூ.0.35 கோடி (447 ஷோ)
திருவனந்தபுரம்: ரூ.0.14 கோடி (135 ஷோ)
கொச்சி: ரூ.0.09 கோடி (129 ஷோ)
பூஜா ஹெக்டேவுக்கு ரெட்ரோ பட வாய்ப்பு கிடைக்க ‘இந்த’ பிளாப் படம் தான் காரணமாம்!
விடாமுயற்சி பட ப்ரீ புக்கிங் வசூல் விவரம்:
ஒட்டுமொத்தமாக இந்தியா முழுவதும் விடாமுயற்சி 5278 ஷோக்களில் வெளியிடப்படுகிறது. இதன் மூலமாக ரூ.14.21 கோடி முன் பதிவு மூலமாக வசூல் குவித்து சாதனை படைத்துள்ளது. திரையரங்கிற்கு பிறகு ஓடிடி ரிலீஸ் செய்யும் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.100 கோடி கொடுத்து கைப்பற்றியுள்ளது. விடாமுயற்சி படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, ஆக்ஷன் கிங் அர்ஜூன், ஆரவ், ரெஜினா கஸாண்ட்ரா ஆகியோர் பலர் நடித்துள்ளனர். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ரூ.350 கோடி பட்ஜெட்டில் லைகா நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. நேற்று இந்தப் படத்தின் மேக்கிங் வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு அஜித் இந்தப் படத்திற்காக தன்னை எந்த அளவிற்கு அர்ப்பணித்திருக்கிறார் என்று காட்டியது. அதே போல் இன்றைய தினம், அஜித்தின் ரேஸ் வெற்றியை கொண்டாடும் விதமாக விடாமுயற்சி படக்குழு AK ஆன்தம் பாடலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.