கலாஷேத்ரா விவகாரம்: நல்லகுடும்பத்துல பிறந்த எங்களுக்கு எவ்ளோ எரியும் ஆண்ட்டி? குட்டிபத்மினிக்கு அபிராமி பதிலடி
கலாஷேத்ரா விவகாரத்தில் கைதான ஆசிரியருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அபிராமியை நடிகை குட்டி பத்மினி விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் கலாஷேத்ரா அறக்கட்டளை வளாகத்தில் உள்ள ருக்மணி தேவி நுண்கலை கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதை அடுத்து, பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியர் ஹரிபத்மன் என்பவரை போலீசார் கைது செய்தனர். எஞ்சியுள்ளவர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர்.
இந்த விவகாரத்தில் ஹரிபத்மன் தரப்பு விளக்கத்தையும் கேட்க வேண்டும் என்று அக்கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவியும், நடிகையுமான அபிராமி குரல் கொடுத்தார். இதையடுத்து பாலியல் புகாரில் சிக்கியவருக்கு ஆதரவு அளித்ததாக கூறி நடிகை அபிராமிக்கு பல்வேறு நடிகைகள் மற்றும் திரையுலக பிரபலங்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த நடிகை அபிராமி, தான் 10 ஆண்டுகளுக்கு முன் படித்தபோது இதுபோன்று நடந்ததில்லை. இந்த விவகாரம் அரசியலாக்கப்படுகிறது. ஹரிபத்மன் மிகவும் நல்லவர் என பேட்டி அளித்து இருந்தார். அவரின் இந்த பேட்டியை பார்த்த நடிகை குட்டி பத்மினி சமீபத்தில் இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசி உள்ளார்.
இதையும் படியுங்கள்... வாரிசு முதல் நாய் சேகர் வரை... தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக டிவி-யில் ஒளிபரப்பாகும் படங்கள் என்னென்ன? முழு விவரம்
அதில் “நீங்கள் திரைத்துறையில் இருப்பதால் ஒருவர் உங்களை தொடுவது என்பது எந்த ஃபீலும் உங்களுக்கு இருக்காது. ஆனால் மற்ற பெண்களும் அப்படியா? என அபிராமியிடம் கேள்வி எழுப்பி இருந்தார் குட்டி பத்மினி. இதற்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அபிராமி பதிலடி கொடுத்து பதிவிட்டுள்ளார்.
அதில், “திரைத்துறையில் இருக்கும் எல்லா பெண்களும் உங்களை மாதிரி இருக்க மாட்டார்கள் குட்டி பத்மினி ஆண்ட்டி. உங்களுக்கு எந்த ஃபீலிங்கும் வரவில்லை என நினைக்கும் போது வருத்தமாக உள்ளது. ஒன் மோர் விஷயம் உங்களுக்கே பத்திக்கிட்டு வருதுன்னா, நல்ல குடும்பத்துல பிறந்த எங்களுக்கு எவ்ளோ எரியும் ஆண்ட்டி! நாங்க பாத்துக்குறோம் ஆண்ட்டி. இந்த வயசான காலத்துல நீங்க உடம்ப பாத்துக்கோங்க” என பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... அம்பேத்கர் பிறந்தநாளுக்கு இத செய்யணும்..மக்கள் இயக்கத்திற்கு விஜய் பிறப்பித்த உத்தரவு! பரபரக்கும் அரசியல் களம்