வாரிசு முதல் நாய் சேகர் வரை... தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக டிவி-யில் ஒளிபரப்பாகும் படங்கள் என்னென்ன? முழு விவரம்
தமிழ் புத்தாண்டு தினத்தன்று திரையரங்கைப் போல் தொலைக்காட்சியிலும் ஏராளமான படங்கள் ஒளிபரப்பப்பட உள்ளன. அதன் விவரங்களை தற்போது பார்க்கலாம்.
சன் டிவி
தமிழ் புத்தாண்டு தின ஸ்பெஷலாக சன் டிவியில் காலை 11 மணிக்கு நடிகர் வடிவேலு நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆன நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. இதையடுத்து அன்றைய தினம் மாலை 6 மணிக்கு நடிகர் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு ரிலீசாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன வாரிசு திரைப்படம் ஒளிபரப்பப்பட உள்ளது.
விஜய் டிவி
தமிழ் புத்தாண்டிற்கு விஜய் டிவியில் காலை 11 மணிக்கு சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படமும், பிற்பகல் 2 மணிக்கு மாளிகப்புரம் என்கிற டப்பிங் படமும், மாலை 5 மணிக்கு கார்த்தி நடித்த விருமன் மற்றும் இரவு 8 மணிக்கு அவர் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன கடைக்குட்டி சிங்கம் ஆகிய திரைப்படங்கள் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளன.
இதையும் படியுங்கள்... அம்பேத்கர் பிறந்தநாளுக்கு இத செய்யணும்..மக்கள் இயக்கத்திற்கு விஜய் பிறப்பித்த உத்தரவு! பரபரக்கும் அரசியல் களம்
ஜீ தமிழ்
ஜீ தமிழில் தமிழ் புத்தாண்டு தின ஸ்பெஷலாக வருகிற ஏப்ரல் 14-ந் தேதி காலை 1 மணிக்கு நடிகர் அருண் விஜய், நடிகை பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளிவந்த யானை திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. அதேபோல் அன்றைய தினம் மாலை 4 மணிக்கு ரக்ஷித் ஷெட்டி நடித்த 777 சார்லி திரைப்படம் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
கலைஞர் டிவி
தமிழ் புத்தாண்டு தினத்தன்று கலைஞர் டிவியில் காலை 10 மணிக்கு ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை திரைப்படமும், மதியம் 1.30 மணிக்கு அருண் விஜய்யின் சினம் திரைப்படம், மாலை 6 மணிக்கு சிவகார்த்திகேயனின் டான் திரைப்படமும், இரவு 8.30 மணிக்கு ஆர்யா, நயன்தாரா நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படமும் ஒளிபரப்பாக உள்ளது.
இதையும் படியுங்கள்... லோகேஷ் கனகராஜ் முதல் உதயநிதி வரை... தோனியின் 200-வது மேட்சை பார்க்க சேப்பாக்கத்திற்கு படையெடுத்த கோலிவுட்