தனது கெரியரில் ஒரு ஃபிளாப் படம் கூட கொடுக்காத வெற்றி இயக்குனர்.. எல்லா படங்களுமே சூப்பர் ஹிட்..
தனது கெரியரில் ஒரு தோல்வி படத்தை கூட கொடுக்காத பாலிவுட் இயக்குனர் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான ராஜ்குமார் ஹிரானி பாலிவுட்டின் வெற்றிகரமான இயக்குனர்கள் பட்டியலில் தனது பெயரை பொறித்துள்ளார். முன்னா பாய் எம்பிபிஎஸ், 3 இடியட்ஸ், பிகே மற்றும் சஞ்சு போன்ற வெற்றிப் படங்களை அவர் இயக்கி உள்ளார். அவரின் படங்கள் பெரும்பாலும், இலகுவான கதைக்கருவை கொண்டிருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ராஜ்குமார் ஹிரானியின் படங்கள் முக்கியமான சமூகப் பிரச்சினைகளை பற்றி பேசும் அதே வேளையில், நகைச்சுவை மற்றும் வலுவான உணர்ச்சிகளை கொண்டிருக்கும்.
அவர் பாலிவுட்டில் இதுவரை ஐந்து படங்களை மட்டுமே இயக்கி இருந்தாலும், அவை அனைத்தும் சூப்பர் ஹிட்டான படங்கள் என்பதே கூடுதல் சிறப்பு.. ராஜ்குமார் ஹிரானி நான்கு தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் 11 பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளை பெற்றவர். இயக்குனர் ஷாருக்கான் நாயகனாக நடிக்கும் ராஜ்குமார் ஹிரானியின் அடுத்த படமான டங்கி, டிசம்பர் 22 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதால் தற்போது டிரெண்டிங்கில் உள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ராஜ்குமார் ஹிரானி ஆரம்பத்தில் ஒரு எடிட்டராக தனது திரைப்பயனத்தை தொடங்கினார். மிஷன் காஷ்மீர் திரைப்படத்தில் எடிட்டராக பணியாற்றினார். பின்னர் இயக்குனராக முடிவு செய்த அவர், அவர் முன்னா பாய் எம்பிபிஎஸ் ஸ்கிரிப்டை தயார் செய்தார். ராஜ் குமார் ஹிரானி இயக்கிய. இப்படத்தில் சஞ்சய் தத், அர்ஷத் வர்சி மற்றும் போமன் இரானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இது 2003 இல் வெளியிடப்பட்டது மற்றும் அந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.
அந்த படத்தின் தனித்துவமான கருத்து மற்றும் வெற்றிக்காக 2004 இல் தேசிய திரைப்பட விருதையும் வென்றது. 10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 56.28 கோடி ரூபாய் வசூலித்தது. முன்னா பாய் எம்பிபிஎஸ் படத்தின் ரீமேக் தமிழில் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் என்பது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து லகே ரஹோ முன்னா பாய் என்ற அந்த படத்தின் 2-ம் பாகத்தையும் ராஜ்குமார் ஹிரானி இயக்கினார். இந்த படமும் பாக்ஸ் ஆபிஸிலும் பெரும் வெற்றி பெற்றது. மொத்தம் 126 கோடி வசூல் செய்தது.
2009 ஆம் ஆண்டில், ராஜ்குமார் ஹிரானி பாலிவுட்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர்களில் ஒன்றை 3 இடியட்ஸ் படத்தை வழங்கினார், இதில் அமீர் கான், மாதவன், ஷர்மான் ஜோஷி மற்றும் போமன் இரானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இப்படத்தில் கரீனா கபூர் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ 400 கோடி வசூல் செய்தது. பொறியியல் கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது. இந்த படத்தை தான் தமிழில் விஜய் நடிப்பில் நண்பன் என்ற பெயரில் இயக்குனர் ஷங்கர் ரீமேக் செய்தார்.
ராஜ்குமார் ஹிரானியின் 2014 ஆம் ஆண்டு வெளியான பிகே திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனைகளை முறியடித்தது. இந்தப் படத்தில் அமீர்கான் மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். 85 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, உலகம் முழுவதும் 770 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இது பாலிவுட்டில் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.
ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் சஞ்சு, தனது நண்பரும் பாலிவுட் நடிகருமான சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து அவர் இயக்கிய படமாகும். ரன்பீர் கபூர் முக்கிய ரோலில் நடித்த இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.586 கோடி வசூல் செய்தது.