அன்று பிழைப்புக்காக கழிவறையை சுத்தம் செய்த பிரபல நடிகை.. ஆனா இன்று அவரின் சொத்து மதிப்பு ரூ.58 கோடி..!
தற்போது மிகவும் பிரபலமாக இருக்கும் அந்த நடிகை பணக்கார பாகிஸ்தானிய நடிகைகளில் ஒருவராகவும் இருக்கிறார்.
ஷில்பா ஷெட்டி, ப்ரீத்தி ஸிந்தா, தீபிகா படுகோனே, அனுஷ்கா ஷர்மா என பல நடிகைகள் பாலிவுட்டில் நடிகர் ஷாருக்கானுடன் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டின் நட்சத்திரங்களாக மாறினர். அந்த வகையில் ஷாருக்கானுடன் பாலிவுட்டில் அறிமுகமான நடிகை ஒருவர், 17 வயதில் தனது பிழைப்புக்காக கழிவறைகளை சுத்தம் செய்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாத தகவல்.. ஆனால் தற்போது மிகவும் பிரபலமாக இருக்கும் அந்த நடிகை பணக்கார பாகிஸ்தானிய நடிகைகளில் ஒருவராகவும் இருக்கிறார்.
சமீபத்தில் 2-வது திருமணம் செய்த அவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. பாகிஸ்தானில் மட்டுமின்றி இந்தியாவிலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர் வேறு யாருமல்ல பிரபல நடிகை மஹிரா கான் தான்.
மஹிரா கான் 2006 இல் VJயாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், பின்னர் பிரபல பாகிஸ்தானிய இயக்குனர் ஷோயப் மன்சூர் இயக்கிய Bol என்றதிரைப்படத்தில் நடித்தது அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.. ஹம்சஃபர் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் அவர் மேலும் பிரபலமடைந்தார்.
Mahira khan
பின்னர், 2017 இல், ரயீஸ் படத்தில் ஷாருக்கானுடன் பாலிவுட்டில் அறிமுகமானார். ராகுல் தோலாகியா இயக்கிய இந்த படம் அவரது பெரிய பாலிவுட் அறிமுகத்தைக் குறித்தது, மேலும் திரைப்படத்தில் ஷாருக்கான் உடனான அவரது கெமிஸ்ட்ரி பார்வையாளர்களால் மிகவும் பாராட்டப்பட்டது. இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. மேலும் பாக்ஸ் ஆபிஸில் உலகம் முழுவதும் ரூ 281.45 கோடி வசூலித்தது.
Mahira khan
மஹிரா கான் தனது படிப்பிற்காக 17 வயதில் கலிபோர்னியாவுக்கு குடிபெயர்ந்ததாக கூறப்படுகிறது, மேலும் நடிகை கழிவறைகளை சுத்தம் செய்து தனது வாழ்க்கையை நடத்தி வந்தார். பின்னர் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஒரு உள்ளூர் கடையில் காசாளராக வேலைக்கு சேர்ந்தார். 2021 ஆம் ஆண்டில், நடிகை ஃபுஷியா இதழுக்கு அளித்த பேட்டியில் இந்த தகவலை சொன்னார்.
மேலும் பேசிய அவர் “நான் வாழ்க்கையில் கடினமான நேரங்களையும் பார்த்திருக்கிறேன் என்பதை மக்கள் தெரிந்துகொள்ள விரும்பும் விஷயங்களைப் பகிர்ந்துகொண்டேன். நான் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்த காலத்தில் தரையை துடைத்தேன் கழிவறைகளை சுத்தம் செய்துள்ளேன். இது எளிதான பயணம் அல்ல, ஆனால் இது ஒரு பெரிய விஷயம்.” என்று தெரிவித்தார்
பாகிஸ்தானின் பணக்கார நடிகை, பாகிஸ்தானில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக மஹிரா கான் இருக்கிறார். அவர் ஒரு படத்திற்கு ரூ. 3 முதல் 5 லட்சம் வரை சம்பளம் பெறுவதாகவும், அவரின் மொத்த சொத்து மதிப்பு 7 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 58 கோடி) இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Mahira khan
Jo Bachay Hain Sang Samait Lo என்ற பாகிஸ்தானின் முதல் நெட்பிளிக்ஸ் ஒரிஜினல் தொடரில் ஃபவாத் கானுடன் மஹிரா கான் ஜோடியாக நடிக்கிறார். இது ஃபர்ஹத் இஷ்தியாக்கின் 2013 ஆம் ஆண்டு அதிகம் விற்பனையாகும் உருது மொழி நாவலின் அதிகாரப்பூர்வ தழுவலாகும். அஹத் ரஸா மிர், ஹம்ஸா அலி அப்பாஸி, பிலால் அஷ்ரஃப், மாயா அலி, இக்ரா அஜீஸ், ஹனியா அமீர், குஷால் கான், நதியா ஜமீல், ஒமெய்ர் ரனா மற்றும் சமினா அஹ்மத் உள்ளிட்ட பலர் இந்த தொடரில் நடித்துள்ளனர்
மஹிரா கான் 2007 இல் அலி அஸ்காரி என்பவரை திருமணம் செய்து கொண்டார், ஆனால் 2015 இல் இருவரும் பிரிந்தனர். அவர்களுக்கு அஸ்லான் என்ற மகன் பிறந்தார். சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட மஹிரா கான் மீண்டும் தலைப்பு செய்திகளில் இடம்பிடித்துள்ளார். தற்போது தொழிலதிபர் சலீம் கரீமை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறார்.