MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • TRP-யில் பொளந்து கட்டும் சன் டிவியின் புது சீரியல்கள்! சிறகொடிந்த சிறகடிக்க ஆசை! டாப் 10 பட்டியல்!

TRP-யில் பொளந்து கட்டும் சன் டிவியின் புது சீரியல்கள்! சிறகொடிந்த சிறகடிக்க ஆசை! டாப் 10 பட்டியல்!

ஒவ்வொரு வாரமும், சீரியல்களின் TRP பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டும் நிலையில், இந்த வாரம் டாப் 10 இடத்தை கைப்பற்றிய சீரியல்கள் பற்றி பார்க்கலாம். 

3 Min read
manimegalai a
Published : Oct 04 2024, 09:05 PM IST| Updated : Oct 04 2024, 09:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Kayal and Singapennea

Kayal and Singapennea

திரைப்படங்களையே மிஞ்சும் வகையில், சீரியல்கள் அதிக படியான ரசிகர்களால் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடத்தின் 39-ஆவது வாரம், டி ஆர் பி-யில் டாப் 10 இடத்தை கைப்பற்றிய சீரியல்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் முதல் இடத்தை கைப்பற்றிய 'கயல்' சீரியல் தான் இந்த வாரமும் டிஆர்பி-யில் முதலிடத்தை கைப்பற்றி உள்ளது. ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த எழில் மற்றும் கயலின் திருமணம் தற்போது நடைபெற உள்ளதால், இந்த சீரியல் மீதான ஆர்வம் ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது.  இந்த வாரம் கயல் சீரியல் 10.03 புள்ளிகளுடன், டிஆர்பி தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை கைப்பற்றியுள்ளது.

இரண்டாவது இடத்தில் 'சிங்க பெண்ணே' சீரியல் உள்ளது. ஆனந்திக்கு அன்பு தான் அழகன் என்கிற உண்மை தெரியவரும் சூழல் நெருங்கி உள்ள நிலையில், அதே நேரம் ஆனந்திக்கு மகேஷ் தன்னை காதலிக்கும் விஷயம் தெரிய வருமா? தான் கர்ப்பமாக இருக்கும் தகவல் ஆனந்திக்கு தெரிய வந்தால்... என்னென்ன கலோபரம் நடக்கும் என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. இந்நிலையில் இந்த தொடர் 8.86 டிஆர்பி புள்ளிகளுடன், இரண்டாவது இடத்தை தக்கவைத்து கொண்டுள்ளது.

25
Marumagal and Moonru muduchu

Marumagal and Moonru muduchu

சன் டிவியில் அண்மையில் துவங்கப்பட்ட 'மூன்று முடிச்சு' தொடர் இந்த வாரம் 8.71 டிஆர்பி புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. நந்தினி என்கிற கிராமத்து பெண்ணை சுற்றி நடக்கும் இந்த கதை களத்தில், ஏழை வீட்டு பெண்ணான நந்தினி எப்படி பணக்கார வீட்டு பையன் சூர்யாவை விதியின் வசத்தால் திருமணம் செய்து கொள்கிறார்? என்பதை மையமாக வைத்து இந்த தொடர் உருவாகி உள்ளது. இந்த தொடர் ஒளிபரப்பான சில வாரங்களிலேயே, டிஆர்பி பட்டியலில் நல்ல இடத்தை நோக்கி நகர்ந்துள்ளது.  இதற்கு காரணம் எதிர்பாராத பல திருப்பங்கள் இந்த தொடரில் நிகழ்ந்து வருவதே.

இந்த தொடரை அடுத்து, இந்த வாரம் டாப் 10 டிஆர்பி பட்டியலில் 'மருமகள்' சீரியல் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. ஆதிரை மற்றும் பிரபுவின் திருமணத்தை நடத்தி வைக்க சிலர் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், ஆதிரையின் திருமணத்தை நிறுத்த அவரின் சித்தியும்... பிரபுவின் திருமணத்தை நிறுத்த அவரின் சித்தப்பாவும்.. பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இப்படிப்பட்ட தடைகளைத் தாண்டி ஆதிரை மற்றும் பிரபுவின் திருமணம் எப்படி நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தளபதி 69 பட பூஜை; வேஷ்டி சட்டையில் மாலையும் கழுத்துமாக பூஜா ஹெக்டேவுடன் போஸ் கொடுத்த விஜய்!

35
Sundari and Siragadikka Aasai

Sundari and Siragadikka Aasai

அதேபோல் இந்த வாரம் டிஆர்பியில் ஐந்தாவது இடத்திற்கு வந்துள்ளது சுந்தரி தொடர். கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் சுந்தரி தொடர், இந்த வாரம் 8.52 டிஆர்பி புள்ளிகளை புள்ளிகளை கைப்பற்றி உள்ளது. சுந்தரியிடம் இருந்து தன்னுடைய மகள் தமிழை பிரிக்க வேண்டும் என கார்த்தி ஒருபுறம் முயன்று வரும் நிலையில், விஜய்யை எப்போது சுந்தரி திருமணம் செய்து கொள்வார் என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இதை தொடர்ந்து, டாப் 3 லிஸ்டில் இடம்பிடித்து வந்த விஜய் டிவி தொடரான சிறகடிக்க ஆசை சீரியல், இந்த வாரம் 6 இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 7.88 டிஆர்பி புள்ளிகளை கைப்பற்றி உள்ள சிறகடிக்க ஆசை  தொடரில், ரோகினி மூலம் முத்துவுக்கு எப்படிப்பட்ட பிரச்சனை வரப்போகிறது? என்கிற எதிர்பார்ப்பு ஒருபுறம் இருந்தாலும், ரோகிணி பற்றிய உண்மை எப்போது தெரிய வர போகிறது என்பதையும் ரசிகர்கள் எதிர்பார்த்து கார்த்திருக்கின்றனர்.

45
Ramayanam and Pandian Store

Ramayanam and Pandian Store

இந்த வாரம் ஏழாவது இடத்தில்  உள்ளது 'பாண்டியன் ஸ்டோர்' தொடர். 7 புள்ளிகளை கைப்பற்றி உள்ள இந்த தொடர், நாளுக்கு நாள் எதிர்பார்க்காத கதைகளத்தில் நகர்ந்து வருவதே சீரியல் டிஆர் முன்னேற்றத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.

இந்தியா தொடந்து, சன் டிவியின் ஒளிபரப்பாகி வரும் 'ராமாயணம்' தொடர் 6.82 டிஆர்பி புள்ளிகளுடன் ஏழாவது ஏழை கைப்பற்றியுள்ளது. எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தட்டாத தொடராக இருக்கக்கூடிய இராமாயணம் தொடர், கடந்த சில வாரங்களாகவே டாப் 10 பட்டியலில் இடம் பிடித்து வருகிறது.

நயன்தாராவின் ரீல் தங்கை முதல்... காதல் ஜோடி வரை! பிக்பாஸ் சீசன் 8 இறுதி போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ!
 

55
Baakiyalakshmi and Aaha Kalyanam

Baakiyalakshmi and Aaha Kalyanam

இந்த வாரம் ஒன்பதாவது இடத்திற்கு வந்துள்ளது டாப் 5 பட்டியலில் இடம் பெறும் சீரியலான 'பாக்கியலட்சுமி' தொடர். ராமமூர்த்தியின் மறைவுக்கு பின்னர், இந்த சீரியல் சோகமான கதைகளத்தில் நகர்ந்து வருவதால் ரசிகர்களுக்கு சற்று அலுப்பு தட்டி உள்ளது. அதேபோல் கூடிய விரைவில் இந்த தொடரில் இருந்து கோபி கதாபாத்திரத்தில் சதீஷ் விலக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சீரியல் இந்த வாரம், 6.52 புள்ளிகளை கைப்பற்றி உள்ளது.

பத்தாவது இடத்தில் ஆஹா கல்யாணம் சீரியல் உள்ளது. இஷ்டமே இல்லாமல் திருமணம் நடந்திருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு கணவனுக்காக புகுந்த வீட்டில் நடக்கும் அத்தனை பிரச்சனைகளையும் சகித்துக் கொண்டு வாழ்ந்து வந்த மகா, தற்போது கணவர் ஏற்கனவே ஒரு குழந்தைக்கு தந்தை என்று தெரிந்த பின்னர் சூர்யாவிடம் இருந்து விலக முடிவு செய்துள்ளார். சூர்யா கூறியதற்கு பின்னணியில் உள்ள உண்மை என்ன என்கிற ஆர்வம் எழுந்துள்ள நிலையில், இந்த தொடர் பல மாதங்களுக்கு பின்னர் மீண்டும் டாப் 10 டிஆர்பி பட்டியலில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
கயல் (தொலைக்காட்சித் தொடர்)
சிறகடிக்க ஆசை
தமிழ் சீரியல்
விஜய் தொலைக்காட்சி தொடர்கள்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved